கருத்தரங்குகள்
சேவாதளத் தொண்டர், பாலவிகாஸ் குரு களப்பணி, மற்றும் வாசகர் வட்டம் இவற்றில் பயிற்சி அளிப்பது போல், பிரிவு ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் என்பது தற்போது பிரிவு 2 மற்றும் 3 ஆகியவற்றிற்கு முன்னெடுத்துச் செல்லப்படுகிறது கூட்டுத்தியானம், ஜப காலங்கள், சமுதாயத்தில் பல்வேறு இனத்தவருடன் இணைந்து பணியாற்றல் (பல்வேறு மத ப்ரார்த்தனைகள் ஆதரவற்ற பெண்களுடன் பேசுதல் முதலியன) விழா காலங்களில் தாழ்த்தப் பட்ட வர்க்கான நிகழ்ச்சிகள் நடத்துதல், ஆலோசனை தேவையானவர்க்கு ஆலோசனை வழங்குதல் முதலியன, பாலவிகாஸ் வகுப்புகளில் கற்றவற்றை மேலும் நன்கு புரிந்து கொள்ள மேற்கண்டவைகள் உதவும் கருத்தரங்குகள், மாநாடுகள், விவாத கருத்தரங்குகள், விவாத மாநாடுகள் போன்றவை, அறிவுத்திறன் கொண்டவையாக அமைந்துள்ளதால், சாயி இலக்கியங்கள் மற்றும் அதைப் போன்ற இலக்கியங்களை ஆழ்ந்து படிக்க ஒரு வாய்ப்பாக அமைகின்றது. தயாரிப்பு வேலைகளின் போது குருவும், மாணவர்களும் இந்த வாய்ப்பை பெறுகின்றனர். இதனை பாலவிகாஸ் மைய அளவிலோ, சமிதி அளவிலோ ஏன், மாவட்ட, மானில அளவிலும் கூட ஏற்பாடு செய்யலாம்.
முதலில், இதுபோன்ற, மானாடுகள், கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யும் முன் அதற்கான தலைப்பை நமது பாடத் திட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். தலைப்பை நாம் பாடத்திட்டத்திலிருந்து தேர்ந்தெடுத்திருந்தாலும் கூட, பாடத்திட்டத்தையும் தாண்டி, தயார் செய்வதற்கு அவர்களை ஊக்குவிக்க வேண்டும். இது அவர்களிடம் புத்தகம் படிக்கும் ஆவலைத் தூண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பை ஒட்டி, குருமார்கள் அவர்களிடம் ஒரு புத்தகப் பட்டியலை தயாரித்து தரலாம். அதாவது, சத்யசாயி அருளமுதம், வாஹினி வரிசை புத்தகங்கள் மற்றும் இதர சாயி இலக்கியங்கள். மேலும் ரேடியோசாயி நிகழ்ச்சிகளையும் பரிசீலிக்க அறிவுறுத்தலாம். எனினும், தயாரிப்பின் போதே கூட இதனை மதிப்பீடு செய்யலாம். குழந்தைகள் பாலவிகாஸ் தலைப்பில் நன்கு பரிச்சயமானவுடன் அவர்களை ஒரு தேர்ந்தெடுத்த தலைப்பில் ரேடியோசாயி ஒலிபரப்பை கேட்க செய்து பின்னர் அதனைப் பற்றி விவாதிக்க அல்லது பேச சொல்லலாம்.
இதுபோன்ற நிகழ்ச்சிகள் போது ஏற்படக் கூடிய சிக்கலென்னவென்றால், குழந்தைகள் தங்களிடையே போட்டியின் காரணமாக கருத்து வேறுபாடுகள் கொள்ளலாம். எனவே நிகழ்ச்சி நடைபெறும்போதும், நிகழ்ச்சி முடிவுறும்போதும் அவர்கள் சோர்ந்து விடாமலும், அதிக மகிழ்ச்சியால் அகம்பாவம் அடையாமலும் அவர்களை கவனமாக கையாள வேண்டும். பின்னர் குரு, அவற்றை தொகுத்து வழங்கி, மேலும் அவர்கள் சாயி இலக்கியங்கள் படிக்கவும் சமிதி வாசகர் வட்டத்தில் பங்கு கொள்ளவும் ஊக்குவிக்க வேண்டும்.
குறிப்பாக, விவாதத்திற்கான தலைப்பை தேர்வு செய்யும்போது இருதரப்பினரும் நேர்மறையான கருத்துகளை தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். குரு வழிகாட்டலில் அது எவரையும் துன்புறுத்தும் ஒரு வாக்குவாதமாக மாறாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நடுவராக இருப்பவர், விவாத்த்தின் முக்கிய கருத்துகளை சிறப்பித்து சொல்ல வேண்டும். நிறைவுரையும் ஒரு தலைபட்சமாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது இரண்டு அணிகள் கொண்ட ஒரு விவாதமாக இருந்தாலும் ஒரு அணி மற்றதைவிட சிறப்பாக செய்திருந்தாலும், இரண்டு அணிகளிலும் சிறப்பாக இருந்த கருத்துக்களை குரு எடுத்துச்சொல்ல வேண்டும். குருவும் இந்த தலைப்புகளின் மீது நன்கு தயாரிப்பு வேலைகளை செய்திருந்தால் மட்டுமே, குழந்தைகள் சொல்லத் தவறிய கருத்துகளை எடுத்துச் சொல்ல முடியும்.