தங்கள் குழந்தைச் செல்வங்களின் ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், குழந்தைகளின் நன்னடத்தையை உருவாக்கும் பொறுப்பை ஏற்று, மனித ஒருமைப்பாட்டினை வலியுறுத்தும் பாரதத் திருநாட்டின் செழிப்பான பண்பாடு மற்றும் ஆன்மீகப் பாரம்பரியத்தினை அவர்களுக்கு எடுத்துரைப்பதற்கும் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா, பெற்றோர்களுக்கு விடுத்த அழைப்புதான், “மனித மேம்பாட்டின் மலர்ச்சி” எனும் பொருள் பொருந்திய ஸ்ரீ சத்ய சாயி பாலவிகாஸ் ஆகும்.
இவ்வாறாக, அறநெறிப்படி வாழ்க்கை வாழ்ந்திடுவதற்காக, உலகம் தழுவிய தனிமனித அர்ப்பணிப்பைச் சாத்தியம் ஆக்குவதற்காக, பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்களால் ஸ்ரீ சத்ய சாயி பாலவிகாஸ் தோற்றுவிக்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு, வாரந்தோறும் ஒரு மணி நேரம் நடத்தப்படும் ஒவ்வொரு பாலவிகாஸ் வகுப்பிலும், எளிமையான, ஆனால் மிகவும் பயன்முனைப்புள்ள, பின்வரும் கற்பித்தல் முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.