நளிநீ தலகத ஜல
கேட்பொலி
வரிகள்
- நளிநீ – தலகத – ஜல – மதி – தரலம்
- தத்வத் – ஜீவித மதிசய – சபலம் I
- வித்தி வியாத்யபிமான – க்ரஸ்தம்
- லோகம் ஸோக ஹதம் ச ஸமஸ்தம் II
பொழிப்புரை
தாமரை இலையின் மேலுள்ள நீர்த் திவலை சஞ்சலமானது. அதுபோலவே வாழ்வும் மிகவும் சஞ்சலமானது. நிலையற்றது. உலகம் முழுவதும் நோயாலும், அகங்காரத்தாலும் பீடிக்கப்பட்டதென்றும், வருத்தத்தால் ஆக்கிரமிக்கப்பட்டதென்றும் உணர்வாயாக. நிலையற்ற இந்த உலக வாழ்க்கைக்காக வீணாக அலையாதே என்பது கருத்து..
விளக்கவுரை
நளிநீ தலகத | தாமரை இலை மீதுள்ள |
---|---|
ஜலம் | நீர்த்துளி |
அதி தரலம் | மிகவும் சஞ்சலமானது |
தத்வத் | அதுபோல |
ஜீவிதம் | வாழ்க்கை |
அதிசய | மிகவும் |
சபலம் | சஞ்சலமானது |
சமஸ்தம் லோகம் ச | எல்லா உலகையும் |
வ்யாதி அபிமான | நோய் , கர்வம் என்பவைகளால் |
க்ரஸ்தம் | விழுங்கப்பட்டதாகவும் |
சோகஹதம் ச | வருத்தத்தால் தாக்கப்பட்டதாகவும் |
வித்தி | அறிவாயாக |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty