- பிரார்த்தனை என்பது காலையின் திறவுகோல், மாலையின் தாழ்ப்பாள்.
- அன்பின்றி கடமையாற்றுதல் வருந்தத்தக்கது.
அன்புடன் கடமையாற்றுவது விரும்பத்தக்கது.
கடமையின்றி அன்பு காட்டுவது தெய்வீகமானது. - (பாசம்)அன்பு, மரியாதை, பக்தி இவை ஒன்றை ஒன்று தொடர்ந்து வருகிறது.
- இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே தடையாக இருப்பது செய்யும் செயல்களின் பலனை எதிர்பார்ப்பதே.
- மனிதன் கடவுள். ஆனால் மனிதன் அதை அறியவில்லை.
கடவுள் தான் கடவுள் என்பதை அறிகிறார்.
இதுவே கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள வித்தியாசம். - பிரார்த்தனை அற்ற செயல் இருட்டில் தடவித் தேடுவதைப் போல குருட்டுத்தனமானது. பிரார்த்தனையுடன் கூடிய செயல் நேர்மையும், சக்தியும் வாய்ந்தது.
- சொற்களில் தயை, நம்பிக்கையை உருவாக்குகிறது.
எண்ணங்களில் தயை, ஆழமான அறிவை உருவாக்குகிறது.
கொடுப்பதில் தயை, அன்பை உருவாக்குகிறது. - வேலையே வழிபாடு. கடமையே கடவுள்.
- அவசரம் வீணடிக்கிறது.
வீணடிப்பு கவலையை உருவாக்குகிறது.
எனவே எதற்கும் அவசரப்படாதே. - ஒழுக்கமற்ற ஜாதி மதிப்பற்றது. அது வெறும் லேபிள் தான்.
- எண்ணத்தில் அன்பு, சத்யம்.
செய-ல் அன்பு, மங்களம் (அ) சிவம்.
உணர்ச்சியில் அன்பு, அழகு (அ) சுந்தரம். - மௌனத்தின் ஆழத்தில் மட்டுமே இறைவனின் குரலைக் கேட்க முடியும்.
- நீ ஜோதியில் இருக்கிறாய்.
ஜோதி உன்னிடத்தில் இருக்கிறது.
ஜோதியும் நீயும் ஒன்றே. - இறைவனில்லாத மனிதன் மனிதனே அல்ல.
மனிதனில்லாத இறைவன் இறைவனே. - முதல் படி – மனிதன் மதுவைக் குடிக்கிறான்.
2வது படி – மது மதுவைக் குடிக்கிறது.
3வது படி – மது மனிதனைக் குடிக்கிறது. - இறந்த காலத்தைத் திரும்பப் பெற முடியாது.
எதிர்காலத்தைப் பற்றி நிச்சயம் இல்லை.
நிகழ்காலம் உன்னுடையது; உனக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே நல்ல எண்ணங்கள், நல்ல வார்த்தைகள், நல்ல செயல்கள் மூலம் அதனைப் புனிதப்படுத்து. - சத்தியம் உனது தந்தை.
அன்பு உனது தாய்.
ஞானம் உனது மகன்.
அமைதி உனது சகோதரி.
பக்தி உனது சகோதரன்.
யோகிகள் உனது நண்பர்கள் - நான் ஒருவனல்ல மூவர்.
நான் யார் என்று மற்றவர்கள் நினைக்கிறார்களோ அது.
நான் யார் என்று நானே நினைக்கிறேனோ அது.
உண்மையில் நான் யாரோ அது (ஆத்மா). - அறிவின் நோக்கம் அன்பு.
பண்பாட்டின் நோக்கம் பூரணத்துவம்.
ஞானத்தின் நோக்கம் முக்தி.
கல்வியின் நோக்கம் நல்லொழுக்கம். - (தன்னை ஆத்மா என்று அறியாத) அறியாமையில் கட்டப்பட்டு இருப்பதை விட இறப்பதே நல்லது.
- பேச்சை கட்டுப்படுத்துவதே மிகச் சிறந்த ஆபரணம்.
அதுவே மிகச் சிறந்த ஆயுதமும் கூட. - பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட, சேவை செய்யும் கரங்களே புனிதமானவை.
- ஒரே ஒரு மதம் அது அன்பு மதம்.
ஒரே ஒரு மொழி அது இதயத்தின் மொழி.
ஒரே ஒரு ஜாதி அது மானுட ஜாதி.
ஒரே ஒரு கடவுள் அவர் சர்வ வியாபி (எங்கும் இருக்கிறார்). - உடலை வளை (சமுதாய சேவை செய்ய).
புலன்களைத் திருத்து (பக்தியை வளர்க்க).
மனதை (ஆசைகளை) நிறுத்து (ஞானமடைய).
அதுவே அழியாத் தன்மைக்கு வழி.
அமுத மொழிகள்
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty