ஜெய் துர்கா லக்ஷ்மி
கேட்பொலி
பஜனை வரிகள்
- ஜெய் துர்கா லக்ஷ்மி ஸரஸ்வதி ஸாயி ஜகன்மாதா
- ஸாயி ஜகன்மாதா மாம் பாஹி ஜகன்மாதா
- ஸாயி ஜகன்மாதா மாம் பாஹி ஜகன்மாதா
விளக்கவுனர
ஜகத்துக்கெல்லாம் அன்னையாக விளங்குகின்ற துர்க்கை, லக்ஷ்மி. ஸரஸ்வதி, சாயி முதலியவர்களுக்கு ஜெயமுண்டாகட்டும். சாயி என்ற ஜகன்மாதாவே உன்னை நான் சரணடைகிறேன். துர்கா பார்வதி தேவியின் மற்றொரு பெயர். வீரத்திற்கு இறைவி. லக்ஷ்மி சகல சம்பத்துக்களின் இறைவி. ஸரஸ்வதி வித்தைகளுக்கு இறைவி.
காணொளி
பதவுரை
ஜெய் | வெற்றி உண்டாகட்டும். |
---|---|
துர்கா | நமக்கு பலத்தையும் சக்தியையும் கொடுப்பவள்.இவளை வெல்வது மிகக் கடினம் ஆகையால் துர்கா என்று அழைக்கப்படுகிறாள் |
லக்ஷ்மி | நமக்கு செல்வத்தை வாரிவழங்குபவள் |
ஸரஸ்வதி | நமக்கு அறிவையும், ஞானத்தையும், கலைத்திறனையும் வாரிவழங்குபவள் ஸரஸ் – ஏரி : வதி – வசிப்பவள் : நமது இருதயமாகிய ஏரியில் வசிப்பவள். |
சாயி | தெய்வீக அன்னை ஸா – தெய்வீக : ஆயி – அன்னை |
ஜகன்மாதா | பிரபஞ்சத்தின் அன்னை ஜகத் – பிரபஞ்சம் : மாதா – அன்னை |
மாம்பாஹி | என்னைக் காப்பாற்று மாம் – என்னை : பாஹி – காப்பாற்று |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 3