ஓம் தத் ஸத்
கேட்பொலி
பஜனை வரிகள்
ஓம் தத் ஸத் ஸ்ரீ நாராயண தூ,
புருஷோத்தம குரு தூ
ஸித்த புத்த தூ,
ஸ்கந்த விநாயக ஸவிதா பாவக தூ
ப்ரம்ம மஜ்த தூ,
யஹ்வ ஶக்தி தூ, ஏசுபிதா பிரபு தூ,
ருத்ர விஷ்ணு தூ,
ராம க்ருஷ்ண தூ, ரஹிம் தாவோ தூ,
வாசுதேவ கோ விஶ்வரூப தூ,
சிதானந்த ஹரி தூ,
அத்விதீய தூ, அகால நிர்பய
ஆத்ம லிங்க ஶிவ தூ (3)
சர்வ தர்ம பிரார்த்தனையின் முக்கியத்துவம்
சர்வ தர்ம பிரார்த்தனை, இறைவனின் பல்வேறு நாமங்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட நாமாவளி ஆகும். அனைத்து மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் வகையில் இப்பிரார்த்தனை தொகுக்கப்பட்டுள்ளது. பாபா கூறுகிறார், “ஒவ்வொரு மதமும் ஒரு பேருண்மையின் ஒரு முகப்பாகும். ஒவ்வொரு நாமமும் அவரது மகிமைக்கு வழிகாட்டி. ஒவ்வொரு உருவமும் அவரது அழகின் நினைவுச் சின்னம். அவரது பெருங்கருணை. இறைவனின் பித்ருத்துவமும், மனிதனின் சகோதரத்துவமும் தான் ஒரே உண்மையாகும்”.
காணொளி
பதவுரை
ஓம் | என்றும் மாறாத தன்மை உடைய, பிரபஞ்சத்துவம் உடைய, ஒப்புயர்வு அற்ற தலைவனின் ஒலிமயமான குறி. “ஓம்” என்றால் ஒத்திருத்தலாகும். ‘ஆண்டவன் எல்லாருக்கும் அனுகூலமாயிருப்பவன்’ என்பதற்கு என்ன பொருள்? எவன் எவ்வாறிருக்கிறானோ அவனுக்கு அவ்வாறு ஒத்திருப்பதாகும்’* |
---|---|
தத் | புலன்களால் உணரமுடியாத, மனதின் கற்பனை வளத்தால் உணர முடியாத, அறிவுப்பூர்வமான விசாரணையினால் அறிந்து கொள்ள முடியாத, மேற்சொன்ன மூன்றையும் கடந்த நிலை உடையது. தத் என்றால் அவன் (இறைவன்)* |
ஸத் | இவற்றிலிருந்து வெளியாகின்ற உண்மை-சத்யம். முழு படைப்பையும் தொடர்ந்து செய்துகொண்டும், காத்துக் கொண்டும், முழுவதிலும் ஊடுருவி நிற்பதும். ஓம் தத் ஸத் என்பது வேதாந்த தத்துவத்தின் சாரம். எங்கு உண்மை உள்ளதோ அங்கு ஆண்டவன் இருப்பான்* |
ஸ்ரீ | லக்ஷ்மி அல்லது செல்வம், கௌரவம், பிரகாசம், நல்ல வழியில் ஈட்டப்பட்ட சக்தி; ”ஸ்ரீ என்பது ஒருவகைக் கட்டுப்பாட்டாலும், ஒழுங்கு முறையாலும், தூய்மையாலும் தோன்றுகிறது. புற ஒழுக்கமும், அகத்தூய்மையும் இணையும் போது அழகு ஏற்படுகிறது”*. |
நாராயண | ‘ஸர்வ பூதாந்தர்யாமி”. தெய்வீக சம்பந்தமான தனி நபர்கள் ஒன்று கூடியிருக்கும் இடங்களில் வெளிப்படையாகப் பிரசன்னமாகக் கூடியவர்தான் நாராயணன். நர என்ற சொல்லிலிருந்து ‘நாராயண’ தோன்றியிருக்கிறது. ‘நர’ என்றால் நடத்திச்செல்பவன். தலைவன் என்று பொருள். ‘நரர் –மனிதர்களின் கூட்டம்’. மக்கள் நிரம்பிய மன்றத்தில் விளங்கும் ஆண்டவனுடைய உருவத்தை ‘நாராயண’ என்று சொல்கிறோம்”* |
புருஷோத்தம | ராகம், த்வேஷம் இல்லாத பரிசுத்தமானவர். மிகவும் கம்பீரமான தோற்றப் பொலிவு உடையவர். மாயை, கற்பனை ஆகிய சாம்ராஜ்யங்களுக்கு அப்பாற்பட்டவர். அவரே புருஷோத்தமர். “மாந்தருள் உயர்ந்தவன்”* |
குரு | தான் பரிசுத்தமாக இருப்பதால் மற்றவர்கள் பரிசுத்த நிலை அடைய வழி நடத்திச் செல்பவர் குரு |
ஸித்த | தெளிவாகத் தெரிந்த ஒன்று. ஜைன மதக்கோட்பாட்டின் குறிக்கோள். ‘சித்த’ என்றால் செய்து முடிக்கப்பட்டதொன்று. வேலை நிறைவேறிவிட்டது என்று சொல்கிறோமல்லவா? அதாவது, வேலை முடிந்தாகிவிட்டது என்றாகிறது. வேலையை சாதித்துக்கொண்டான் என்றால், ‘வேலை முற்றுப்பெற்றது’ என்று பொருள். எனவே, சித்த என்றால் முற்றுப்பெற்றவன்(பூரணமானவன்) என்று பொருள் ’* |
புத்த | விழித்தெழுந்த ஒன்று. புத்தமதத்தின் குறிக்கோள். விழிப்புற்றவர்; விழிப்படைந்தவன் அதாவது இவ்வுலகத்தின் உண்மை நிலையை அறிந்தவன் * |
ஸ்கந்த | பரிசுத்தத்தின் வழியில் குறுக்கே வரும் தவறுகளைக் களைபவர். (உலகிலுள்ள துன்பத்தை) மாய்ப்பவன்; பேராற்றல் படைத்தவன்.* |
வினாயக | கணேசரை வழிபடுபவர்களுக்குப் பிடித்தமான மற்றொரு பெயர். தனக்கு நிகரில்லாத தலைவன்.r |
ஸவிதா | வேலைகள் செய்வதற்கு ஊக்கமளிக்கின்ற இறைவனாகிய சூரியன். |
பாவக | அக்னி, ஜோராஷ்ட்ரியர்கள் நெருப்பைக் கடவுளாக வணங்குவர். |
பிரம்ம | எங்கும் பரவியுள்ள, உருவமற்ற, காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டது, எதன் மூலம் அனைத்துப் படைப்புகளும் தோன்றவும், அடங்கவும் செய்கின்றதோ அது, பிரம்மம். |
மஜ்த | அஹுராமஜ்த: எல்லாம் வல்ல இறைவன். இறைவனுக்கு ஜோராஷ்ட்ரியர்கள் வழங்கும் பட்டப்பெயர். பார்சி மொழியில் அஹுர என்றால் தேவர்கள் என்று பொருள்.மஜ்த என்றால் மகான் என்றுபொருள். அஹூர், மஜ்த ஆகிய இரண்டும் இணைந்து மகாதேவ்(சிவபெருமான்) என்று பொருளாயிற்று.* |
யஹ்வ | யூதர்கள் கடவுள் ஜுஹோவா. அதை யூதர்கள் ‘யாஹோவ’ என அழைக்கின்றனர். ரிக் வேதத்தில் யஹ்வ என்ற நாமம் இருக்கிறது. இதற்கு வேதத்தில் ‘இளைஞன்’ என்று பொருள். இறைவன் இளைஞன். |
ஶக்தி | இறைவனை, காளி, சண்டி, மஹிஷாசுரமர்த்தினி எனப் பல வடிவங்களில், சக்தியை வழிபடுபவர்கள் அழைப்பார்கள். |
ஏசுபிதா | இயேசுபிரானை வானுலகத்தில் வசிக்கும் தந்தை எனக் குறிப்பிட்டுள்ளார். |
பிரபு | எல்லாம் வல்ல இறைவன்; மாண்பு மிக்கவர்; வலிமை பொருந்தியவர்; இறைவன் மூவுலகுக்கும் முதல்வன்; படைப்பின் மாவேந்தர்.*s |
ருத்ர | சம்சாரம் என்ற பந்தத்தில் நம்மைப் பந்தப்படுத்தி அழ வைப்பவர். நாம் அவரிடம் சரணடைந்து கடுமையான எளிமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின் சைவர் சூடும் பட்டப்பெயர். துப்புரவு செய்பவர்; அமங்கலத்தைத் துப்புரவு செய்பவர்; தீய எண்ணங்களை அழிப்பவர்.(தடுப்புத்துறை) * |
விஷ்ணு | பிரபஞ்சம். எங்கும் நிறைந்திருக்கும் உள்ளுணர்வு. நல்லெண்ணங்களை வளர்ப்பவன். (வளர்ப்புத்துறை) |
ராம் | தர்மத்தின் அவதாரம். அவர் வைத்துள்ள கோதண்டத்திலிருந்து வரும் அம்பு, குறி தவறாமல் இலக்கை எட்டும். ராம் என்றால் சத்தியம், தூய்மை, உண்மை.* |
கிருஷ்ணன் | பிரேமையின் அவதாரம். கிருஷ்ண என்றால் அன்பு. ஆனந்திப்பவர்; உள்ளத்தை உழுபவர், கவருபவர் என்று பொருள். |
ரஹீம் | கருணைமிக்கவர் ; முஸ்லிம் அன்பர்களால் சூட்டப்பட்ட பெயர். |
தாவோ | சீனர்களால் சூட்டப்பட்ட பெயர்; இது சம்ஸ்க்ருதத்திலிருந்து வந்தது. ‘தன்’ என்றால் விரிவடையச் செய்தல், பெரிதாக்குதல் என்பதாகும். நம்முடைய இந்த உடம்பைத் ‘தனு’ என்று சொல்கிறோம். அதாவது, ஆன்மா இந்த உடலில் பரவியிருக்கிறது என்று பொருள். ‘தாவோ’ என்றால் உலகம் முழுவதிலும் பரவியுள்ள ஆண்டவர்; அப்படியென்றால் அவன் சமமாக நிரம்பியிருப்பவன் என்று பொருள். தாவோ என்றால் உலகம் முழுவதும் பறந்து இருப்பதும், எங்கும் ஒரே தன்மையாக நிரம்பி இருப்பதும் ஆகும்.* |
வாசுதேவ | எல்லா உயிரினங்களையும் தன்னுடைய வசிக்குமிடமாகக் கொண்டவர். வைணவர்கள் சூட்டிய பட்டப் பெயர். ‘தேவ’ என்றால் இறைவன். ‘வாசு‘ என்றால் உறையச் செய்பவன், தங்கச் செய்பவன். எல்லோருக்கும் தங்க இடம் கொடுப்பவனை ‘வாசுதேவ’ என்று அழைக்கிறோம்.* |
கோ | வாணி, பேச்சு, கடவுளின் ஒளி வீசும் சக்தி, பசு, நிலமகள் |
விஶ்வரூப | கிருஷ்ணனின் தெய்வத்தன்மை, இந்த உலகில் காணும் பொருள்கள், ஜீவராசிகள் அனைத்துள்ளும் வசித்து வருவதாகக் கீதை கூறுகிறது |
சிதானந்த | ஆன்மா தான் மிகச்சிறந்த தெய்வீகத்தின் உண்மையான பிரதிநிதி. அதன் இயல்பு சத்-சித்-ஆனந்தம். நிரந்தரமான கருணை மிகுந்த, அருள் மிகுந்த உள்ளுணர்வாகிய பேரானந்தம். சித் என்றால் விழிப்பு, அறிவு, உணர்வு என்பதாகும். ஆனந்த என்றால் மகிழ்ச்சி. ஆண்டவனின் இன்பம் நிலையானது. இன்பத்திற்கு இன்பத்தைக் கொடுப்பவன், விழிப்பிற்கு விழிப்பு ஊட்டுபவன் இறைவன். அப்பேற்பட்டவன் சிதானந்தன் ஆகிறான்.* |
ஹரி | மாயைகளனைத்தையும் அழிப்பவன். தீ வினைகள், கவலைகள், துன்பங்கள், நோய்கள் ஆகியவற்றை அழிப்பவன் * |
அத்விதீய | இரண்டற்றவன். |
அகால | காலத்தை வென்றவன், சீக்கியக் கடவுள் நாமம் |
நிர்பய | பயமே இல்லாதவன். தன்னை வழிபடுபவர்களையும் பயமற்றவர்களாக ஆக்குபவன் |
ஆத்மலிங்க | ஆத்மாதான் பரம்பொருளான இறைவனின் குறியீடு(அடையாளம்) |
ஶிவ | மிகப்புனிதமான ஒன்று. மேலே சொன்ன இரண்டும் சைவர்களால் சூட்டப்பட்ட பட்டப்பெயர். மங்களம் என்று பொருள்* |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 3
-
செயற்பாடு
-
மேலும் படிக்க
-
TEACHING AIDS