பூர்வம் ராம
கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- பூர்வம் ராம தபோவனாதி கமனம் ஹத்வா ம்ருகம் காஞ்சனம்
- வைதேஹி ஹரணம் ஜடாயுமரணம் சுக்ரீவ ஸம்பாஷணம்
- வாலி நிர்தலனம் ஸமுத்ர தரணம் லங்காபுரி தாஹனம்
- பஶ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம் ஏதத் ஹி ராமாயணம்
விளக்கவுரை
தசரதன் கைகேயிக்கு கொடுத்த வாக்கைக் காப்பதற்காக, இராமன் காடு சென்றான். காட்டில் சீதை, பொன்மானைக் கண்டு மயங்கி, அதை தரக் கோரினாள். அதைப் பிடிக்க இராமன் சென்றான். அப்போது இராவணன், சீதையைக் கடத்திச் சென்றான். பறவை அரசன் ஜடாயு, இராவணனுடன் போரிட்டு, சீதையைக் காக்க முயன்றான். ஆனால், இராவணன் ஜடாயுவைக் கொன்றான். இராமன் சுக்ரீவனை நண்பனாக ஆக்கிக் கொண்டு, அவனுக்காக, தவறாக நடந்த வாலியைக் கொன்றான். பின்பு இராமன் கடல் கடந்து இலங்கையை அடைந்தான். அங்கே போரிட்டு, இராவணனையும், கும்பகர்ணனையும் கொன்று இலங்கையை அழித்து, சீதையை மீட்டான். இதுவே இராமாயணக் கதையின் சுருக்கம்.
காணொளி
பதவுரை
பூர்வம் | பழம் காலத்திற்கு முன் |
---|---|
தபோவனாதி | முனிவர்கள் வசிக்கின்ற இடம் |
கமனம் | பயணப்பட்ட இடம் |
ஹத்வா | அழிப்பதற்கு |
ம்ருகம் | மிருகம் (மற்றொரு பொருள் அறியாமை இருள்) |
காஞ்சனம் | அழியத்தக்கது. அதாவது தவறானவை, கவர்ச்சியுடையவை |
வைதேஹி | சீதை; வை – அழியத்தக்கது, தேஹி – தேகம். அதாவது அழியும் உடல் |
ஹரண | வெளியேறுதல் |
ஜடாயு | சீதையை இராவணன் கடத்திய போது போரிட்ட பறவை. இதன் பொருள் மன அசைவைக் காட்டுவது |
மரணம் | அழிவு |
சுக்ரீவ ஸம்பாஷணம் | சு – நல்ல. க்ரீவா – கழுத்து, சுக்ரீவா – புத்திசாலி, ஸம்பாஷணம் – அருகே வந்து பேசுவது |
வாலி நிர்தலனம் | வாலியின் அழிவு (வாலி என்ற சொல்லுக்கு நேர் பொருள் – காப்பவன். (வாலி தீமை செய்ததால் அழிக்கப்படுகிறான்) |
நிர்தலனம் | அழித்தல் |
சமுத்ர | கடல் (இங்கு கடல் என்பது சம்சார சாகரம்) |
தரணம் | கடலைக் கடக்க நீந்துவது |
லங்காபுரி தாஹனம் | லங்கா – வருத்தம், துன்பம் நிறைந்த நகரம்; தாஹனம் – எரித்தல் |
பஶ்சாத் ராவண கும்பகர்ண | சிறிது காலத்திற்குப் பின் இராவணனையும் கும்பகர்ணனையும் |
ஹனன | கொன்றது |
ஏதத் ஹி | இது மட்டும், இதுவே |
ராமாயணம் | இராம சரித்திரம் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
செயற்பாடு
-
மேலும் படிக்க