ஸாந்தாகாரம்
கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- ஶாந்தாகாரம் புஜகஶயனம் பத்மநாபம் ஸுரேஶம்
- விஶ்வாதாரம் ககனஸத்ருஶம் மேகவர்ணம் ஶுபாங்கம்
- லக்ஷ்மீகாந்தம் கமலநயனம் யோகிபிர்த்யான கம்யம்
- வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம்.
விளக்கவுரை
தெய்வீக அமைதியுள்ள வடிவத்தையுடையவரை, பாம்பைப் படுக்கையாக உடையவரை, தேவர்களுக்குத் தலைவரை, உலகத்தின் அடிப்படையாக இருப்பவரை, ஆகாயத்திற்கு இணையானவரை, மேகத்தின் நிறத்தை உடையவரை, மங்களகரமான, அங்கங்களையுடையவரை, இலட்சுமியின் அன்புக்குப் பாத்திரனாயிருப்பவரை, தாமரைக் கண் உடையவரை, யோகிகளுடைய தியானத்தின் குறிக்கோளாயிருப்பவரை, எங்கும் நிறைந்தவரை, பிறப்பைப் பற்றிய அச்சத்தைப் போக்குபவரை, எல்லா உலகங்களுக்கும் ஒரே ஒரு தலைவராயிருப்பவரை வணங்குகிறேன்.
காணொளி
பதவுரை
ஶாந்த + ஆகாரம் – ஶாந்தாகாரம் | ஶாந்த-தெய்வீக அமைதியுள்ள ஆகாரம்-வடிவத்தையுடையவரை |
---|---|
புஜக | பாம்பு |
ஶயன | படுக்கை |
ஶயனம் | படுக்கையை உடையவரை |
புஜக ஶயனம் | பாம்பைப் படுக்கையாக உடையவரை |
பத்ம | தாமரை |
நாபி | தொப்புள் |
பத்மநாபம் | தன் தொப்புளில் தாமரையை உடையவரை |
ஸுர + ஈஶம் – ஸுரேஶம் | ஸுர-தேவர்; ஈஸ : தலைவர் தேவர்களுக்குத் தலைவரை |
விஶ்வ | உலகம் |
ஆதாரம் | அடிப்படை |
விஶ்வாதாரம் | உலகத்தின் அடிப்படையாக இருப்பவரை |
ககன | ஆகாயம் |
ஸத்ருஶ | இணையான |
ககன ஸத்ருஶம் | ஆகாயத்திற்கு இணையானவரை |
மேக வர்ணம் | மேக-மேகம்; வர்ண-நிறம் மேகத்தின் நிறத்தை உடைய வரை |
ஶுப +அங்கம் – ஶுபாங்கம் | ஶுப-மங்களகரமான் அங்கம்-அங்கங்களை உடையவரை |
காந்த | அன்புக்கு பாத்திரனாயிருப்பவர் |
லக்ஷ்மீகாந்தம் | இலட்சுமியின் அன்புக்கு பாத்திரனாயிருப்பவரை |
கமலநயனம் | கமல-தாமரை; நயன-கண்; தாமரைக் கண் உடையவரை |
யோகிபிர்த்யானகம்யம் | யோகிகளுடைய தியானத்தின் குறிக்கோளாயிருப்பவரை |
பவபயம் | பவம்-பிறப்பு; பிறப்பைப் பற்றிய அச்சம் |
ஹரம் | போக்குபவரை |
விஷ்ணும் | எங்கும் நிறைந்தவரை |
ஸர்வலோக | எல்லா உலகங்களுக்கும் |
ஏக | ஒரே ஒரு |
நாதம் | தலைவராயிருப்பவரை |
வந்தே | வணங்குகிறேன் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 3
-
செயற்பாடுt
-
மேலும் படிக்க