சாந்தி
உலகளவில் மிகவும் பொதுவான தேவையாக இருப்பது அமைதியே (சாந்தியே) ஆகும். எனவே உலக அமைதியைக் கொண்டுவர முயற்சிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நோபல் அமைதிப் பரிசு மற்றும் சர்வதேச அங்கீகாரங்கள் பலவும் நாம் பெற்றிருக்கிறோம். அமைதியைத் தேடும் அனைவருக்கும் நம் பகவான் ஒரு எளிய தீர்வினை வழங்குகிறார். “நான்” (I) மற்றும் “ஆசை” (WANT) இவற்றை விலக்கினால் ஒருவர் அமைதியைப் (PEACE) பெறுவார். அமைதி நிரம்பப் பெற்றவர் இன்பத்தில் துள்ளுவதோ, துன்பத்தில் துவளுவதோ இல்லை, பேரார்வமோமுடையவற்றவராக, பதற்றமோ இன்றி மிகவும் திருப்தியுடன் இருப்பர். வாழ்க்கை சமநிலையுடன் இருப்பதோடு ஒவ்வொன்றும் ஆசிர்வாதமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
இதை பகவான் மிகத் தெளிவாக விளக்குகிறார்:
புலன்கள் உங்களது உடைமை என்பதற்காகவே அவற்றின் போக்குக்கு அவற்றை விடுதல் என்பது முட்டாள்தனம். உங்கள் குதிரையாகவே இருந்தாலும் கூட சவாரி செய்யும் போது அதன் கடிவாளத்தை நீங்கள் விட்டு விட்டால் நீங்கள் பேரிடரை சந்திக்கக் கூடும். அதுபோன்றே “இது என்னுடைய கார்” என்று நீங்கள் கூறலாம். ஆனால் தேவைப்படும்போது நீங்கள் பிரேக்கை உபயோகிக்காவிடில் அது உங்களுடைய கார்தான் என்றாலும் உங்களை ஆபத்திற்கு இட்டு செல்லும். ஞானிகள் மற்றும் சாதுக்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மனிதர்களுக்கும் புலன் கட்டுப்பாடு மிகவும் அவசியம்.
இந்தப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள மூன்று கதைகளிலிருந்தும் அமைதியைப் (சாந்தியைப்) பற்றி நாம் இன்னும் அதிகமாக தெரிந்து கொள்வோம்.