தர்மம்
சத்தியம் செயலாக வெளிப்படும்போது அதுவே நேர்மையான வாழ்க்கையாக மாறும். சத்தியம் சொற்களோடு தொடர்புடையது என்றாலும் தர்மம் என்பது செயலாகும். இதன் அடிப்படையில், வேதங்கள் “சத்யம் வத, தர்மம் சர” (சத்தியத்தைப் பேசு, தர்மத்தை பயிற்சி செய்) என்று போதித்தன. சத்தியத்தைப் பயிற்சி செய்தலே உண்மையான தர்மம். எனவே மனிதன் தன்னை தர்மத்திற்கு அர்ப்பணிப்பது என்பது தவிர்க்க முடியாததாகும்
தர்மம் என்பது மிகவும் சிறுவயதிலிருந்தே ஒரு பயிற்சியாகத் தொடங்கப்பட வேண்டும். அதன் மூலம் தனிநபர் மட்டுமல்லாமல் நாடு முழுவதுமே சரியான பாதையில் முன்னேற வேண்டும்.
தர்மத்தின் முக்கியத்துவத்தை பிரிவு-1 குழந்தைகள் மனதில் விதைக்கும் பொருட்டு நேர்மை, மனிதனுக்கு சேவை செய் கடவுளுக்கு சேவை செய், முயற்சி மனிதனின் மகத்துவம் மற்றும் பெற்றோர்களை மதித்தல் ஆகிய துணை மேம்பாடுகள் தொடர்புள்ள கதைகள் முதல் வருடத்திற்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
அறிமுக ஆதாரம்:
1. ஸ்ரீ சத்யசாய் பாலவிகாஸ் அமைப்பிற்கான வழிகாட்டுதல் மற்றும் கையேடு
2. மனித மேம்பாட்டை நோக்கி– புத்தகம் 2- ஸ்ரீ சத்யசாய் EHV அறக்கட்டளை
3. ஸ்ரீ சத்யசாய் விழுக்கல்வி- மனித விழுமியங்கள்
4. தர்ம வாஹினி