சத்தியம் & தர்மம்
இரண்டு விழுமியங்களை சாரமாகக் கொண்ட கதைகள் தனித்தனியாக பட்டியலிடப்பட்டுள்ளன. சத்தியம் மனித வாழ்வின் குறிக்கோளாகும். சத்தியத்திலிருந்து தர்மம் வெளிப்படுகிறது. தர்மம், அமைதிக்கும் அதனைத் தொடர்ந்து அன்பிற்கும் (ப்ரேமைக்கும்) வழி வகுக்கிறது. எனவே அனைத்தும் சத்தியத்திலிருந்தே தோன்றுகிறது. அனைத்தும் சத்தியத்திலேயே கரைந்துபோகிறது. சத்தியம் இல்லாத இடமே இல்லை.
சத்தியம் செயல்படுத்தப்படும்போது அதுவே தர்மம் ஆகின்றது. இந்தப் பகுதியில் பட்டியலிடப்பட்டுள்ள ‘சத்யமே கடவுள்” (“Truth is God”) என்ற கதை, சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலகர் தன் குழந்தை பிராயத்தில் செய்த துணிச்சலான செயலை விவரிக்கின்றது.
[ஆதாரம்: Guidelines and Manual for Sri Sathya Sai Balvikas
Towards Human Excellence – Book2 – Sri Sathya Sai EHV Trust, Mumbai – என்னும் நூல்]