சத்தியம்
வேதங்களிலும், அனைத்துப் புனித நூல்களிலும் மற்றும் தேசிய முழக்கமாகவும் பாரதீயர்களுக்கு, வலியுறுத்தப்பட்ட மேம்பாடு சத்தியம் ஆகும். காவியங்கள் மற்றும் சமயக்கதைகள் முதல் சுதந்திரப்போராட்ட வீரர்களின் கதை வரை சத்தியத்தைக் கடைபிடித்து வெற்றியை உணர்ந்தவர்களின் நிகழ்வுகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
சத்தியம் என்பது மனித வாழ்க்கையின் கோட்பாடு என்று வேதங்கள் கூறுகின்றன.
ஒருமுறை இந்திரன் பிரகலாதனிடமிருந்து அவனுடைய வரப்பிரசாதமான ஒழுக்கசீலத்தை நாடிப்பெற்றான். ஒழுக்கசீலம் பிரகலாதனை விட்டு சென்றபோது புகழ், செல்வச்செழிப்பு மற்றும் வீரம் ஆகியவற்றின் தேவியர்கள் ஒருவர் பின் ஒருவராக அவனை விட்டு சென்றனர். பிரகலாதன் அவர்கள் செல்வதற்கு அனுமதித்தான். ஆனால் சத்தியம் அவனை விட்டு செல்வதற்கு ஆயத்தமான போது பிரகலாதன் அந்த தேவியிடம் தன்னை விட்டுப் போகவேண்டாம் என்று வேண்டினான். சத்தியம் பிரகலாதனுடன் தங்கிவிட்ட அந்தத் தருணமே புகழ், செல்வம் ஆகியவற்றின் மற்ற தேவியர்களும் திரும்பி வந்து விட்டனர்.
சத்தியம் மற்ற மேம்பாடுகளுக்கு அடிப்படையாகக் கருதப்படுவதால் “சத்தியமே கடவுள்” என்ற தலைப்பைக் கொண்ட கதை நமது பாலவிகாஸ் பாடத்திட்டத்தில் முதலில் பட்டியலிடப்பட்டுள்ளது.