ஹே மாதவா ஹே
கேட்பொலி
வரிகள்
- ஹே மாதவா ஹே மதுசூதனா
- தாமோதரா ஹே முரளிதரா
- மன மோஹன ஹே யது நந்தனா
- தீனாவனா பவ பய பஞ்ஜனா
விளக்கவுரை
இந்த நாமாவளியில் நாம் க்ருஷ்ணனைப் பல பெயர்களால் அழைக்கிறோம். லக்ஷ்மியின் கணவரான மாதவனே! மது என்ற அரக்கனை அழித்தவனே! புல்லாங்குழலைத் தரித்தவனே! மனத்தை ஈர்ப்பவனே! யதுகுல மைந்தனே எளியவர்களைக் காப்பவனே! பிறவி பயத்தை போக்குபவனே !.
பதவுரை
ஹே மாதவா | மாதவனே (லக்ஷ்மியின் மணாளனே) |
---|---|
மதுசூதனா | மது என்ற அரக்கனை அழித்தவனே |
தாமோதரா | தாமா – கயிறு. உதர- வயிறு வயிற்றிலே கயிற்றால் கட்டுண்டவர். கிருஷ்ணரின் பால பருவத்தில் தாய் யசோதா அவரது குறும்புத்தனம் பொறுக்க முடியாமல் அவரை உரலில் கட்டி வைத்தாள் வயிற்றில் கட்டுண்டவனே |
முரளிதரா | முரளி – புல்லாங்குழல் தரா – வைத்து கொண்டிருப்பவர். பகவான் கிருஷ்ணர் புல்லாங்குழலை வாசித்துக் கொண்டிருப்பவர் புல்லாங்குழலை தரித்தவனே |
மனமோஹனா | மன- மனம். மோகனா – மயக்குதல். மனமோஹனா என்றால் மனங்களை மயக்குபவர்; மனத்தை ஈர்ப்பவனே |
யது நந்தனா | யதுநந்தனா – யது குலத்தில் தோன்றியவர். நந்தனா – மகன் யது குலத்தில் தோன்றியதால் பகவான் கிருஷணருக்கு யது நந்தனன் என்ற பெயர். யதுகுல மைந்தனே |
தீனாவனா | வறியவர்களை காப்பாற்றுபவர் |
மஹா காளிகே | துர்கையின் பெயர் |
பவபய பஞ்ஜனா | பவ –பிறப்பு ; பய-பயம்; பஞ்சனா-அழிப்பவனே ;பிறப்பு என்ற பயத்தை அழிப்பவனே |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
ACTIVITY
-
FURTHER READING