ஐந்து மேம்பாட்டு குணங்களான சத்யம் தர்மம் சாந்தி பிரேமை ஆகியவை இயல்பாகவே மனிதனுக்குள் இருக்கின்றன.ஸ்வாமி அதனை பயிற்சி செய்யவும் இதயத்திலிருந்து வெளிக்கொணரவும் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளார்.மனித மேம்பாட்டு குணங் களை கடைப்பிடித்து பயிற்சி செய்ய வேண்டுமென்றால்,ஒருவர் மனிதனின் ஆறு வைரிகளாகிய(ஷட்ரிபுக்கள் அல்லது அரிஷட்வர்க்கங்கள்)காமம்,குரோதம்,லோபம் மோஹம்,மதம் மாத்சர்யம் இவற்றை கைவிட அல்லது தூக்கி எறிய வேண்டும். ஏனெனில் இவை நம்முள்ளிருக்கும் ஐந்து நற்குணங்களை மூழ்கடித்து விடுகின்றன இவற்றை எய்துவதற்கு தன்னம்பிக்கையும் இறைவன்மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் தேவை.தன்னம்பிக்கையே நம் வாழ்வின் அஸ்திவாரம்.அஸ்திவாரம் பலமாக இருந்து விட்டால்,சுய திருப்திக்கும்,தன்னல தியாகத்திற்கும் நாம் பாடுபடவேண்டும். இவையிரண்டையும் கடைப்பிடித்தால் முடிவாக தன்னை யறிதலுக்கு இட்டுச் செல்லும்.
ஷட்ரிபு பிரிவில் உள்ள கதைகளை அன்றாட வாழ்வியல் உதாரணங்களைக் கொண்டு விளக்கலாம்.
குழந்தைகளும் மனித மேம்பாட்டு குணங்களில் வாழ்வில் கடை பிடிக்க கூடியஒன்றை நிகழ்வுகளுடன் விவரித்து பங்கு பெறலாம்.