குழந்தைகள், தங்கள் திறமையைப் பயனுள்ள வகையில் செலவிடவும், சக மாணவர்களுடன் திறம்படப் பழகவும், செய்கை விளையாட்டுகள் நல்ல வாய்ப்பளிக்கின்றன.
இது, குழந்தையின் முழுமையான வளர்ச்சி மற்றும் பல்துறை முன்னேற்றத்திற்கு உதவுகிறது. இதன் மூலம் சமூகத்தில் பழகவும், வெட்கம், தடை மற்றும் தயக்கம் போன்றவற்றை எதிர் கொள்ளவும் உதவுகிறது. அவர்களின் கவனித்தல் மற்றும் தொடர்புத் திறனை மேம்படுத்துகிறது. குழந்தைகளின் ஒருங்கிணைப்பு, ஒத்திசைவு, கைத்திறன் மற்றும் சுறுசுறுப்பை வளர்த்து, அவர்களின் ஒட்டுமொத்த மூளை செயல் திறனை அதிகரிக்கிறது.
பிறர் கருத்துக்களை மதிக்கவும், வாழ்க்கையை சமாளிக்கத் தேவையான சமூகத் திறமைகளையும் கற்றுக்கொடுக்கிறது. தங்கள் முறை வரும்வரை கடைப்பிடிக்க வேண்டிய பொறுமையையும், புரிதலையையும் புகுத்துகிறது.
இவ்வாறாக, செய்கை விளையாட்டுக்கள் ஊக்கத்தை அளித்து, குழந்தைகளின் தினசரி நடைமுறையிலிருந்து மாற்றம் அளிக்கிறது.