நஹிஞானேன
கேட்பொலி
வரிகள்
நஹிஞானேன ஸத்ருஶம் பவித்ரமிஹ வித்யதே
ஸ்வயம் யோக ஸம்ஸித்த: காலேனாத்மனி விந்ததி
பொழிப்புரை
ஞானத்திற்கு ஒப்பான, தூய்மைப்படுத்தும், பவித்ரமானதாக்கும், ஒன்று இவ்வுலகில் ஏதுமில்லை. யோக சித்தியுடை யவன் காலக்ரமத்தில் இந்த உண்மையைத் தன்னிடமே காணப் பெறுவான்.
பதவுரை
இஹ | இவ்வுலகில் |
---|---|
ஞானேன ஸத்ருசம் | ஞானத்திற்கு சமமான |
பவித்ரம் | பரிசுத்தம் செய்யக்கூடியது |
நஹி வித்யதே | இல்லவே இல்லை |
யோக ஸம்ஸித்த: | யோக சித்தியை அடைந்தவன் |
காலேன | காலக்ரமத்தில் |
ஆத்மனி | தனது உள்ளத்தில் |
ஸ்வயம் | தானே |
தத் விந்ததி | அதை (உண்மையை) அறிகிறான் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0