அமைதி மற்றும் அஹிம்சை
மனித விழுமங்களின் அடிப்படை குணம் அன்பு என்றால், அஹிம்சை அவற்றின் உச்ச நிலை ஆகும். பிரபஞ்சத்தில் உள்ள, உயிருள்ள, உயிரற்ற கூறுகள் இடையேயான ஒருமையை நாம் அறிந்தால், அறியாமை விலகும்; விழிப்புணர்வு மலரும். நமது ஆசைகளைத் தீர்த்துக் கொள்ளும் அளவை சிறிது சிறிதாக குறைத்துக் கொள்ளுதல் மூலம், நாம் அஹிம்ஸையைப் பழகிக் கொள்ளலாம்.
உணவு, சக்தி, காலம் மீதான ‘ஆசைக்கு வரம்பு’ அமைத்துக் கொள்ளுதல், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள இணக்கத்தை உருவாக்குகிறது. ‘அஷ்ட புஷ்பங்கள்’ (எண் மலர்கள்) என்னும் பூமாலையில் முதல் மலராக, ஸ்வாமி, அஹிம்ஸையை அருமையாக எடுத்துரைக்கிறார்.
[ஆதாரம்:- தெய்வீக அருளுரை, ஆகஸ்ட் 22, 2000]
உண்மையான அமைதி, நாவினால் செய்யப்படும் அஹிம்ஸையில் கிடைக்கிறது என்பதை விளக்கும் 2 கதைகள் இங்கு விவரிக்கப்படுகின்றன.
1. ‘நல்ல நாவும் கெட்ட நாவும்’
2. ‘மன நிறைவும் அமைதியும்’