ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவனது உள்ளுறையும் இறைவனிடமிருந்து அவனுக்கான பிரத்யேகமான அழைப்பு வரும் என்று ஸ்வாமி கூறுகிறார். நீங்கள் அமைதியாக ஒரு இடத்தில் தியானத்துக்கு அமரத்தொடங்கு முன் இறைவனது உருவத்தினை உங்கள் முன் இருத்துங்கள். இறைவனது நாமத்தினை மனதில் இருத்துங்கள். இவ்விரண்டையும் மாற்றாதீர்கள். ஆனால் உங்களை எது மிகவும் மகிழ்விக்கிறதோ அதனுடனேயே ஒன்றியிருங்கள். தியானிக்கும் போது மனம் அடிக்கடி ஏதாவது ஒன்றின் பின்னால் ஓடுகிறது. அது வேறு பாதைக்கு இட்டுச்செல்கிறது. அப்போது நீங்கள் நாமம் மற்றும் ரூபத்தின் உதவியுடன் அதனை மடை மாற்றி, உங்களுடைய இறைவனைக் குறித்த எண்ணவோட்டம் தடைபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அது மறுபடியும் நிகழ்ந்தால், மீண்டும் நாமத்தையும் ரூபத்தையும் உடனடியாகத் தொடர வேண்டும்.
தியானப்பயிற்சியில் ஆரம்பக் கட்டத்திலிருப்பவர்களுக்கான அறிவுரை யாதெனில், அவர்கள் இறைவனைப் போற்றி சில ஸ்துதிகளை உச்சரிப்பதன் மூலம், அலைபாயும் எண்ணங்களை கட்டுக்குள் கொண்டு வரலாம். பிறகு படிப்படியாக நாமத்தை திரும்பத் திரும்ப உச்சரிப்பதன் மூலம், அந்த நாமத்திற்கான ரூபத்தை மனக்கண் முன் தோற்றுவிக்கலாம்