கரசரண க்ருதம்
கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- கரசரணக்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
- ஶ்ரவண நயனஜம் வா மானஸம் வாபராதம்
- விஹிதமவிஹிதம் வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ
- ஜயஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஶம்போ
விளக்கவுரை
முறையாக செய்யப்பட்ட காரியங்களிலோ அல்லது முறையற்ற காரியங்களிலோ கை, கால், முதலியவைகளினால் செய்யப்பட்டனவும், சொல், உடல், செயல், கேட்டல், பார்த்தல், மனது – இவைகளினால் உண்டாகியனவும் ஆகிய குற்றங்களை எல்லாம், ஹே மஹாதேவா! சம்போ! கருணைக் கடலே! மன்னிப்பாயாக. உனக்கு வெற்றியுண்டாகட்டும்.
காணொளி
பதவுரை
கர | கைகள். க்ரு என்ற சொல்லிலிருந்து வந்தது. செயலைச் செய்வது கைகள் |
---|---|
சரண | கால். சர – நடத்தல். நடப்பதற்கான செயலைச் செய்வது கால்கள். |
க்ருதம் | செய்யப்பட்ட |
வாக் | வாக்கிலிருந்து |
காய | உடல் |
ஜம் | உண்டான |
காயஜம் | உடலிலிருந்து உண்டான |
கர்மஜம் | செயலிலிருந்து உண்டான |
வா | அல்லது |
ஶ்ரவண | கேட்டலிலிருந்து |
நயனஜம் வா | பார்த்தலிலிருந்து உண்டான |
மானஸம் வா | மனதிலிருந்தோ |
அபராதம் | பிழை, குற்றம், தவறு |
விஹிதம் வா | முறையாக செய்யும் காரியங்களிலோ |
அவிஹிதம் வா | முறையற்ற காரியங்களிலோ |
ஸர்வம் | எல்லா |
ஏதத் | இவை |
ஸர்வமேதத் | இவை எல்லாவற்றையும் |
க்ஷமஸ்வ | மன்னிப்பாயாக |
ஜயஜய | வெற்றி உண்டாகட்டும் |
கருணாப்தே | கருணைக்கடலே |
ஸ்ரீமஹாதேவ ஶம்போ | மிகப் பெரிய தலைவனே ! மங்களத்தை அருள்பவனே ! |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
செயற்பாடு
-
மேலும் படிக்க