கிருஷ்ணம் வந்தே
கேட்பொலி
பஜனை வரிகள்
- கிருஷ்ணம் வந்தே நந்த குமாரம்
- ராதா வல்லப நவநீத சோரம்
- ராமம் வந்தே தசரத தநயம்
- சீதா வல்லப ரகுகுல திலகம்
விளக்கவுரை
நந்த குமாரனான கிருஷ்ணனுக்கு என் வணக்கங்கள் உரித்தாகுக. ராதையின் தலைவனும், வெண்ணெய்ப் போன்று மிருதுவாகவுள்ள இருதயங்களை கொள்ளை கொண்டவனுமான கிருஷ்ணனுக்கு என் வணக்கங்கள். தசரத புத்திரனும், சீதையின் பிரபுவுமான இராமனுக்கு என் வணக்கங்கள் உரித்தாகுக. இரகுவம்ச திலகமான மங்களகரமான இராமனுக்கு என் வணக்கங்கள்.
காணொளி
பதவுரை
கிருஷ்ணம் | கிருஷ்ணா என்றால் வசீகரிப்பவன் என்று பொருள்-இதன் மூலச்சொல் ‘கிருஷ்’. இதன் பொருள் வசீகரிக்கும் (ஆகர்ஷண சக்தி) குணம் என்பதாகும். |
---|---|
வந்தே | வணங்குகிறோம் |
நந்த குமாரம் | நந்தன்- கிருஷ்ணனின் வளர்ப்புத் தந்தை, குமாரம்- மகன், நந்தகுமாரம்- நந்தனின் மகன் |
ராதா | கோபியர்களில் மிக முக்கியமானவள் – கிருஷ்ணனின் மிக உயர்ந்த பக்தை |
வல்லப | தலைவன், |
நவநீத சோரம் | நவநீதம் – வெண்ணெய் சோரம் –திருடுதல் |
ராமம் | ராமர் என்றால் ரமிக்கச் செய்பவன் |
தசரத தனயம் | தசரத- ராமரின் தந்தை தசரதர், தனயம்- மகன் தசரத தனயம் – தசரத சக்ரவர்த்தியின் மகன் |
சீதா | ராமரின் துணைவி |
ரகுகுல | ராமரின் வம்சத்தில் மிக உயர்ந்த சக்ரவர்த்தியாக இருந்த ரகு என்பவரின் பெயரால் ‘ரகு வம்சம்’ என்ற வம்ஸாவளிப் பெயர் பெற்றது. |
திலகம் | சிகை அணி அதாவது மிக முக்கியமானவன் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 4
-
செயற்பாடு
-
மேலும் படிக்க