நன்னெறி (அல்லது) தர்மம் என்பது எப்பொழுதும் மாறாதது. எந்த சவால்களாலும் குறைபடாதது. தர்மத்தைக் கடைப்பிடிக்க விரும்பும் ஒரு மனிதன், தனக்குத்தானே நேர்மையாக இருக்க வேண்டும். “ஒருவன் நேர்மையிலிருந்து தவறினால், அவன் அதர்மம் (அநீதி) செய்பவனாவான்”, என்கிறார் ஸ்ரீ சத்ய ஸாய்பாபா.
[ ஆதாரம்: ஸ்ரீ சத்ய சாய் (1966)]
தர்மவானாக இருக்க விரும்புபவன், தன்னுள் இருந்து ஒலிக்கும் இறைவனின் குரலுக்குச் செவிமடுக்க வேண்டும். இவ்வாறு பழகுவது, சரியான மற்றும் தவறானவற்றைப் பகுத்தறியும் திறனை வளர்க்கிறது. ஒரு மனிதன் உலக ரீதியான வாழ்க்கையில், பொருளீட்டும் தொழிலிலும், நிறைவேற்றும் கடமைகளிலும் ஈடுபட்டு இருந்தாலும், நன்னெறியைப் பகுத்தறிந்து பின்பற்ற வேண்டும்.
[ஆதாரம்: ஸ்ரீ சத்ய சாய் (ஜூலை 1974)]
“பதறிய காரியம் சிதறும்” எனும் தலைப்பில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள கதை, நேர்மையை நாம் கடைப்பிடிக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்துகிறது. பகவான் கூறுவதைப் போல, ஒருவர் எப்பொழுதும் விழிப்புணர்வுடன் (சமயோஜித புத்தி) இருப்பதன் மூலம், எப்பொழுதும் நேர்மையாக இருந்து ,அமைதியுடன் வாழ இயலும். இரண்டாவது கதை, சமயோஜித புத்தியை விளக்கும் (ஒரு எளிய, ஆனால் அருமையான) கதையாகும்.
“எந்த வேலையும் உயர்ந்ததோ, தாழ்ந்ததோ இல்லை” என்ற அடுத்த கதை ஜார்ஜ் வாஷிங்டன் அவர்கள், திமிர் மிகுந்த ஒரு படைத் தலைவருக்கு, அன்பை போதிக்கும் வகையில் செய்த ஒரு காருண்யம் மிகுந்த செயலை விவரிக்கிறது.
ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையிலிருந்து,
“பிரசங்கிப்பதற்கு முன் பயிற்சி செய்” என்னும் கதை, நேர்மை (அமைதி) தலைமையேற்று நடத்தும் ஆற்றல் (நன்னடத்தை) ஆகியவற்றை போதிக்கிறது.
அதுபோலவே, “ஒருமுகப்படுதலின் மதிப்பு” எனும் கதையில், விவேகானந்தரின் வாழ்க்கையிலிருந்து இரண்டு சம்பவங்கள் மனதை ஒருமுனைப்படுத்துதல் (அமைதி) மற்றும் தலைமை ஏற்று நடத்தும் ஆற்றல் (நன்னடத்தை) ஆகியவற்றை
விளக்குகின்றன.