வாய்மை (அல்லது) சத்தியத்தின் சுடர்ப்பொறி நம் அனைவருள்ளும் உள்ளது. அப்பொறியின்றி எவராலும் வாழ இயலாது. அனைத்து மெய்ப்பொருளின் மூலாதாரமும் ஆன இறைவன் ஒளிப்பிழம்பு அல்லது சுடராவான். இந்த யதார்த்தமான மெய்மையை அறிய முயலும் ஒரு மனிதன், எப்பொழுதும் அதன் தேடுதலில் இருக்கின்றான் என அறியலாம். வாய்மை என்பது காலம், இடம், பண்பு போன்றவற்றால் மாறுபடுவதில்லை. எப்பொழுதும் மாறுபடாமல், எதனாலும் பாதிக்கப்படாமல், என்றென்றும் ஒரே நிலையில் இருப்பது வாய்மை. மற்றும் எந்த வெளிப்புற சக்தியாலும், ஒருபொழுதும் “தவறு” என்று நிரூபிக்க இயலாதது. நமது பேச்சில் உண்மையற்ற இனிமையும் மற்றும் இனிமையற்ற உண்மையும் தவிர்க்கப்படவேண்டும்.
இப்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் ‘வாய்மையே இறைவன்’ என்னும் கதை மாணவர்கள் விரும்பத்தக்க வகையில், எளிமையான ஒரு வகுப்பறை நிகழ்வைச் சித்தரிக்கிறது. சத்தியத்தைக் கடைப்பிடிப்பதால் மனிதர்கள் எவ்வாறு நல்லவர்களாகவும், சிறந்தவர்களாகவும் ஆக முடியும் என்பதை விவரிக்கிறது.