குருநானக் ஜெயந்தி
சீக்கிய மத நாட்காட்டியில் இது ஒரு முக்கியமான பண்டிகை. இது சீக்கிய மதத்தின் முதல் குருவான குரு நானக் பிறந்ததைக் குறிக்கிறது. சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரும், பத்து குருமார்களில் முதல்வருமானவர் குரு நானக். இந்தக் கொண்டாட்டங்கள், பொதுவாக, ப்ரபாத் பெரிஸ் (அதாவது, இளம் காலையில் குருத்வாராவிலிருந்து புறப்பட்டு அருகாமை இடங்களுக்கு பாடிக்கொண்டே ஊர்வலமாக செல்லுதல்) என்ற நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இது நமக்கு பழக்கமான நகர சங்கீர்த்தனம் செல்வதைபோன்றது. இன்னாளில், குருத்வாராக்களில், நள்ளிரவு வரையிலும் பிரார்த்தனைகள் நடத்துவதுண்டு. பஞ்சாப், ஹரியாணா மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் இந்த கொண்டாட்டங்கள் வண்ணமயமாக இருக்கும்.
நாமஸ்மரணை மற்றும் பஜனையைப் பற்றி பேசும்போதெல்லாம், ஸ்வாமி குரு நானக் பற்றிப் பேசுவதுண்டு. குரு நானக்தான், சமுதாய பஜனை செய்யும் பழக்கத்தை ஆரம்பித்தவர். அவர் தன்னை பின்பற்றுவோர்க்கு சொல்வது என்னவெனில், வாஹே குருவின்(தெய்வம்) நாமத்தைப் பாடி, வாழ்க்கையில் நிறைவையடைய வேண்டும் என்பதாகும். ஆகவே,அனைத்து சீக்கியர்களும் இறை நாமஸ்மரணைக்கு உயரிய முக்கியத்துவம் கொடுப்பர்
இந்தப் பிரிவு, இவ்விழாவினைப்பற்றிய தகவல்களை உள்ளடக்கியது, பாலவிகாஸ் குருமார்கள் வகுப்பு ஆரம்பிக்கும்முன் இதனைப் படித்து அறிந்துக் கொள்ளலாம்.