குழந்தைகள், தகவல்களை தங்கள் குறுகிய மற்றும் நீண்ட கால நினைவில் வைத்துக்கொள்ள, தொடர்ந்து புதிய, நுட்பமான கோட்பாடுகளை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த திறமையை வளர்ப்பதில் நினைவாற்றல் திறன் பெரும் பங்கு வகிக்கிறது.
பயன்கள்:
நினைவாற்றல் விளையாட்டுகள் குழந்தைகளுக்கு நிதானம், கவனம், பிரதிபலிப்பு மற்றும் ஞாபகத்தை புகுத்தி அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான தக்கவைத்தல் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கிறது. இது அவர்களின் அறிதல் திறன் மற்றும் தகவல்களை செயல் படுத்துவதற்கான சூட்சும புத்தி தகுதியை மேம்படுத்த உதவுகிறது.
குருமார்களுக்கான குறிப்புகள்:
குருமார்கள், உதாரணமாக
கொடுக்கப்பட்டுள்ள நினைவாற்றல் விளையாட்டுகளின் அடிப்படையில் பல்வேறு நினைவாற்றலை தூண்டும் வேடிக்கையான நினைவு திறன் விளையாட்டுகளை உருவாக்கலாம். இவற்றின் மூலம் குழந்தைகளுக்கு கண்ட காட்சி, கேட்ட ஒலி மற்றும் உணர்ந்த உணர்வு ஆகியவற்றை நினைவு படுத்தும் திறன் மேம்படுகிறது.