நவராத்திரி/தசரா என்பது ஒரு இந்து பண்டிகையாகும். இது ஒவ்வொரு வருடமும் இலையுதிர் (புரட்டாசி, ஐப்பசி மாதங்கள்)காலத்தில் ஒன்பது இரவுகள் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.கொடுமைகள் புரிந்து வந்த மகிஷாஷாசுரன் என்ற அரக்கனின் கொடுமைகளில் இருந்து விடுபட அவனோடு ஒன்பது நாட்கள் துர்க்காதேவி போரிட்டு அவனைக்க் கொன்றதாக நம்பப்படுகிறது. எனவே இந்த ஒன்பது நாட்களும் துர்க்காதேவிக்கு உகந்த நாட்களாகக் கொண்டாடப்படுகிறது.
மேலும் இந்த பண்டிகை, துர்கா, லெட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரின் ஆற்றலைப்ப் பிரகடனப்படுத்தும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது. துர்கா தேவி நமக்கு உடல் மனம் மற்றும் ஆன்மீக ஆற்றலை அருளுகிறாள். லெட்சுமி தேவி நமக்கு உடல் நலம், வசதி வாய்ப்பு, செல்வம், நற்குணங்கள் ஆகியன வழங்குகிறாள். சரஸ்வதி தேவி நமக்கு மதி நுட்பம்,அறிவு, கலைகள், எதையும் பகுந்தாய்ந்து பார்க்கும் அறிவு ஆகியவற்றைத்த் தருகிறாள்.
இந்த வண்ணமிகுப் பண்டிகையானது, நம் பாரதத் திருநாட்டில் பலபகுதிகளில் பல்வேறு விதமாக்க் கொண்டாடப்படுகிறது. வங்காளத்தில் துர்கா பூஜை என்னும் பெயரில் தேவியரின் விக்கிரகங்களை வைத்து வழிபட்டு பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் “தண்டியா” மற்றும் “கர்பா” என்ற ஒரு வகையான நடனம் ஆடி இப் பண்டிகை கொண்டாடப் படுகிறது. தமிழ் நாட்டில் அழகான பொம்மைகள் மற்றும் உருவச்சிலைகள் ஆகியவற்றை கலைநயத்தோடு அடுக்கி வைத்து, பார்ப்பவர் அனைவரையும் மெய்மறக்கச் செய்யும் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
தசரா அல்லது விஜயதசமி நவராத்திரியின் பத்தாவது நாள் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும். இது, இராமபிரான் இராவணனை போரில் வெற்றி கொண்டதனால் தீமை அழிந்து நன்மை கிடைத்த வெற்றி நாளாகக் கொண்டாடப் படுகிறது.
இந்தப் பண்டிகையின் ஆழமான கருத்துக்களையும், அதன் முக்கியத்துவத்தையும் குழந்தைகளுக்கு எளிதில் புரிய வைக்கும் வகையில், வண்ணம் தீட்டும் வரைபடங்கள் , கைவினைக் கலைகள், சுவாரஸ்யமான கதைகள் மேலும் பல செயற்பாடுகளும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.