நாம் வாழ்ந்து பின் இறக்கிறோம், இயேசு இறந்து பின் வாழ்ந்தார் – இதுவே ஈஸ்டர்!!!
இயேசு கிறிஸ்துவைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். அவர், பெத்லகேம் என்ற ஒரு சிறிய கிராமத்தில், மேரி மற்றும் ஜோசஃப் என்கிற மனிதப் பெற்றோருக்குப் பிறந்து, நம்மிடையே, இறைவனாகவும், மனிதனாகவும் வாழ்ந்தார். ‘இயேசு கிறிஸ்து’ என்பது ஒரு ஹெப்ருவ் பெயர். ‘இயேசு’ என்றால், நம் பாடங்களில் இருந்து நம்மைக் காப்பவர் என்று பொருள். ‘கிறிஸ்து’ என்றால் ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று பொருள். அவருக்கு இந்தப் பெயர் வழங்கப்பட்டதன் காரணம் அறிய, ஈஸ்டர் நிகழ்வுகள் பற்றி அறியலாம்.
மிகவும் சுவாரசியமாக இருக்கிறதா! ஈஸ்டர் பற்றிய மேலும் பல உண்மைகள் அறிய, இந்தப் பிரிவைக் காணுங்கள். இயேசு மற்றும் அவர் சிலுவையில் அறையப்பட்டது பற்றிய பகவானின் தெய்வீக உரைகள், பாடல்கள், கதைகள், விளையாட்டுகள் மேலும் பல செயற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன!