கலை மற்றும் கைவினைப்பொருட்கள் செய்தல், குழந்தைகளுக்கான வேடிக்கையான செயற்பாடுகளாகும். க்ரேயான்களால் வண்ணம் தீட்டுதல், களிமண்ணில் இருந்து பொருள்கள் தயாரித்தல், காகிதத்தை மடித்து சிறந்த ஓரிகாமியை உருவாக்குதல் முதல் கையால் செய்யப்பட்ட புத்தாண்டு அட்டையை வடிவமைத்தல் வரை, பல்வேறு கலை மற்றும் கைவினை செயற்பாடுகள் உள்ளன. இவை, குழந்தைகளின் ஆர்வத்தை மேம்படுத்துகிறது. அவர்களின் அறிவாற்றல், உடல் மற்றும் சமூக வளர்ச்சி போன்றவை மேம்படுவது போல அவர்களின் கலைத் திறனைப் பயன்படுத்தவும் உதவுகிறது.
கலை மற்றும் கைவினைத்திறன், குறிப்பாக இளம் குழந்தைகளிடையே, இயற்கையுடன் ஒரு நெருக்கத்தைக் கொண்டுவருவதற்கும், “எல்லா விஷயங்களும் பிரகாசமானவை மற்றும் அழகானவை” என்ற எண்ணத்தை வளர்ப்பதற்கும் ஊக்குவிக்கப்பட வேண்டும். இது, உள்ளுணர்வை எழுப்புவதற்கும் கலைப்படைப்பில் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்கும் உதவும்.
குழுக்களாக சுவரொட்டி தயாரிப்பது போன்ற செயற்பாடுகள், மாணவர்களிடையே கூட்டு முயற்சி மற்றும் குழுப் பிணைப்பை மேம்படுத்த உதவுகிறது.
பாலவிகாஸ் வகுப்புகளில், ஸ்லோகம், கதை, ஒரு கதாபாத்திரமாக நடித்தல், வினா விடை, குழுப் பாடல் அல்லது கண்காட்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்ற குழு செயற்பாடுகளுக்குத் துணையாகக் கலை மற்றும் கைவினைச் செயற்பாடுகளைப் பயன்படுத்த வேண்டும்.
பாலவிகாஸில் உள்ள பல்வேறு கற்பித்தல் முறைகளையும், கலை மற்றும் கைவினைச் செயற்பாடுகளுடன் ஒருங்கிணைத்து, பயனுள்ள மற்றும் சுவாரசியமான முறையில் நற்பண்புகளை வலுப்படுத்த, குருக்கள் புதுமையான முறையில் முயற்சி செய்ய வேண்டும்.
தொடர்புடைய எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.