அஷ்டோத்திரம்[28-54]
காணொளி
கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- ஓம் ஸ்ரீ ஸாயி ரத்னாகர வம்ஶோத்பவாய நம:
இரத்னாகர வம்சத்தில் பிறந்தவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி ஷீரடி ஸாயி அபேத ஶக்த்யாவதாராய நம:
ஷீரடி ஸாயியாக வந்த அதே சக்தியின் அவதாரத்திற்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி ஶங்கராய நம:
சங்கரருக்கு வணக்கம்
- ஓம் ஸ்ரீ ஸாயி ஷீரடி ஸாயி மூர்த்தயே நம:
ஷீரடி ஸாயியின் உருவமுடையவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி த்வாரகாமாயி வாஸினே நம:
துவாரகாமாயியில் வசிப்பவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி சித்ராவதீ தட புட்டபர்த்தி விஹாரிணே நம:
சித்ராவதியின் கரையில் உள்ள புட்டபர்த்தியில் விளையாடுபவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி ஶக்தி ப்ரதாய நம:
ஆற்றலை அருள்பவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி ஶரணாகத த்ராணாய நம:
தன்னைச் சரணடைந்தவர்களைக் காப்பவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி ஆனந்தாய நம:
ஆனந்தத்திற்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி ஆனந்த தாய நம:
ஆனந்தத்தை அருள்பவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி ஆர்த்த த்ராண பராயணாய நம:
துன்பமுற்றோரைக் காப்பாற்றுவதிலேயே ஈடுபட்டிருப்பவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி அநாத நாதாய நம:
திக்கற்றோரைக் காப்பவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி அஸஹாய ஸஹாயாய நம:
உதவியற்றோருக்கு உதவி செய்பவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி லோக பாந்தவாய நம:
உலகத்தின் உறவினனுக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி லோக ரக்ஷா பராயணாய நம:
உலகத்தின் பாதுகாப்பிலே ஈடுபட்டிருப்பவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி லோக நாதாய நம:
உலகத்தின் தலைவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி தீன ஜன போஷணாய நம:
உதவியற்ற ஜனங்களைக் காப்பவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி மூர்த்தி த்ரய ஸ்வரூபாய நம:
மும்மூர்த்தி வடிவினனுக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி முக்தி ப்ரதாய நம:
மோக்ஷத்தை நல்குபவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி கலுஷ விதூராய நம:
குறையொன்றுமில்லாதவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி கருணாகராய நம:
கருணையின் இருப்பிடமானவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வாதாராய நம:
அனைத்திற்கும் அடிப்படையாய் இருப்பவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ ஹ்ருத்வாஸினே நம:
எல்லா இதயங்களில் வசிப்பவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ புண்ய ஃபலப்ரதாய நம:
எல்லாப் புண்ணியங்களின் பலனையும் நல்குபவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ பாப க்ஷயகராய நம:
எல்லா பாவங்களின் அழிவைச் செய்பவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ ரோக நிவாரிணே நம:
எல்லா வியாதிகளையும் போக்குபவருக்கு வணக்கம்.
- ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ பாத ஹராய நம:
எல்லா துன்பங்களையும் அழிப்பவருக்கு வணக்கம்.
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 9