மனோஜவம்

கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- மனோஜவம் மாருத துல்ய வேகம்
- ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
- வாதாத்மஜம் வானரயூத முக்யம்
- ஸ்ரீ ராமதூதம் ஶரணம் ப்ரபத்யே
விளக்கவுரை
மனதின் வேகம் உடையவரை, காற்றுக்கு இணையான வேகத்தை உடையவரை, புலன்களை வென்றவரை, புத்திமான்களிலே மிகமிகச் சிறந்தவரை, வாயு குமாரனை, குரங்குக் கூட்டத்தில் முதன்மையானவரை, ஸ்ரீஇராமரின் தூதரை சரணம் புகுகின்றேன்.
காணொளி
பதவுரை
| மன : + ஜவ – மனோஜவ | மன: -மனது ; ஜவ-வேகம்; மனதின் வேகத்தை உடையவர் |
|---|---|
| மனோஜவம் | மனதின் வேகத்தை உடையவரை |
| மாருதம் | காற்று |
| துல்ய | இணையான |
| மாருத துல்ய வேகம் | காற்றுக்கு இணையான வேகத்தை உடையவரை |
| ஜித: + இந்திரியம் – ஜிதேந்திரியம் | ஜித: வென்றவன். ஜிதேந்திரிய-புலன்களை. புலன்களை வென்றவரை |
| புத்திமதாம் | புத்திமான்களிலே |
| வரிஷ்டம் | மிக மிகச் சிறந்தவரை |
| வாத + ஆத்மஜ – வாதாத்மஜ | வாத-காற்று; ஆத்மஜ – மகன்; காற்றின் மகன் |
| வானர யூத முக்யம் | வானர -குரங்கு ; வானர யூத – குரங்குக் கூட்டம் குரங்குக் கூட்டத்தில் முதன்மையானவரை |
| ஸ்ரீராம தூதம் | ஸ்ரீஇராமனின் தூதரை |
| ஶரணம் ப்ரபத்யே | சரணம் புகுகின்றேன் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
செயற்பாடு
-
மேலும் படிக்க
















![அஷ்டோத்திரம்[28-54]](https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/04/ashtothram-tiles.png)


