ஓம் ஸஹனாவவது
கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- ஓம் ஸஹனா வவது ஸஹநௌ புனக்து
- ஸஹ வீர்யம் கரவாவஹை
- தேஜஸ்வினாவதீதமஸ்து மா வித்விஷாவஹை
- ஓம் ஶாந்தி : ஶாந்தி : ஶாந்தி:
விளக்கவுரை
பரம்பொருள் நம்மிருவரையும் ஒருங்கே காப்பாற்றட்டும். ஒருங்கிணைந்துள்ள நம்மிருவரையும் ஆளட்டும். ஆசிரியர், மாணவர் என்ற நாமிருவரும் ஒருங்கிணைந்து, மிகச் சிறந்த காரியத்தைச் செய்வோமாக. நம் இருவருடைய கல்வியும் ஒளியுடையதாக இருக்கட்டும். நாமிருவரும் வெறுப்புக் கொள்ளாதிருப்போமாக. இந்த வேதப் பிரார்த்தனை அன்பு, சகோதரத்துவம், பரஸ்பர நட்புறவு போன்ற உயர்ந்த பண்புகளை வலியுறுத்தி, அமைதிக்கும் பகைமையின்மைக்கும் உறுதுணையாகின்றது.
காணொளி
பதவுரை
ஸஹ | (பரம்பொருள்) ஒருங்கிணைந்து |
---|---|
நௌ | நம்மிருவரையும் |
அவது | காப்பாற்றட்டும் |
புனக்து | ஆளட்டும் |
ஸஹ | ஆசிரியர், மாணவர் என்ற நாமிருவரும் ஒருங்கிணைந்து |
வீர்யம் | மிகச் சிறந்த காரியத்தை, |
கரவாவஹை | செய்வோமாக |
தேஜஸ்வீ | ஒளியுடையதாக |
அதீதம் | படிப்பு |
அஸ்து | இருக்கட்டும் |
மா வித்விஷாவஹை | (நாமிருவரும்) வெறுப்புக் கொள்ளாதிருப்போமாக. மா-வேண்டாம் வித்விஷாவஹை-வெறுப்புக்கொள்வோமாக |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
குழு செயல்பாடு
-
மேலும் படிக்க