நம் சுவாசத்தில் கவனம் செலுத்த ஏதுவாக நம் ஸ்வாமி “ஸோ-ஹம்” தியான முறையை நமக்கு அளித்துள்ளார். அதன் விளக்கம் கீழ் வருமாறு:
கண்களைப் பாதியாக மூடிக்கொண்டு, கவனத்தை மூக்கு நுனியில் வைக்க வேண்டும். வலது மூக்கு துவாரத்தை வலது கை கட்டை விரலால் மூடிக்கொண்டு, இடது மூக்கு துவாரத்தின் வழியாக காற்றை உள்ளிழுக்க வேண்டும். சுவாசம் உள்ளிழுக்கப்படும் பொழுது, “ஸோ” என்ற ஒலி எழுப்பப்படுகிறது. பின்னர், இடது மூக்குத் துவாரத்தை மூடிக்கொண்டு வலது துவாரம் வழியாகக் காற்றை வெளிக்கொண்டு வரவேண்டும். சுவாசக்கற்று வெளியே செல்லும் பொழுது “ஹம்” என்ற ஒலி எழுப்பப்படுகிறது. அவன் மற்றும் நான் (நீங்கள்) என்ற அடையாளத்தில் மனதை நிறுத்தி, சுவாசத்தை மெதுவாக, அதேசமயம், நன்றாக உள்ளிழுத்து, வெளியே விடவேண்டும். சுவாசமும், விழிப்புணர்வும் கவனிக்கப் படாத வரை, இது தொடரட்டும். மனதைக் காவலனாக பாவித்து, அதனை உள்ளே வரும் சுவாசம் மற்றும் வெளியே செல்லும் சுவாசம் இரண்டையும் கவனிக்கச் சொல்லவும். சுவாசத்தால் வெளிப்படும் “ஸோ-ஹம்” மந்திரத்தை உள் காதால் கேட்டு, இப்பிரபஞ்சத்தின் மூலாதாரமாகிய தெய்வீகமே நம் இருப்பு என்ற உண்மையை உணர வேண்டும்.