- எப்போதும் கடவுளையே நினைத்துக் கொண்டே இருந்தால் (விரோத பாவத்துடன் ஆயினும்) அத்தகைய எண்ணங்கூட மனதைத் தூய்மைப் படுத்தி விடுதலைக்கு வழிவகுக்கிறது.
- விடாமுயற்சி, தோல்வியைக் கண்டு துவளாமை, மற்றவர்கள் நம்பிக்கை குறைவாகப் பேசினாலும் சோர்வு கொள்ளாமலிருத்தல், இயலாத நிலையிலும் கலங்காதிருத்தல் போன்றவை திடசித்தம் உடையவர்களை வலுவற்றவர் களிடமிருந்து வேறுபடுத்துகிறது.
- தன் தவற்றினை அறிந்து கொண்டு துணிவுடன் நேர்மையுடன் திருத்திக் கொள்ள முயல்பவனே, நாளுக்கு நாள் திருந்தி உயர்வான். விடாமுயற்சியால் பாவியும் யோகி ஆகலாம்.
- மலரிலுள்ள மணம் காற்றில் எங்கும் பரவுவதைப் போல், அன்பு என்னும் உணர்வு எங்கும் பரவினால், வாழ்வில் முழுமை உண்டாகும்; நிறைவு ஏற்படும். ஞானி அத்தகைய அன்பு நிறைந்தவர். ஈ, எறும்பு, செடி, மனிதன் போன்ற வேறுபாடின்றி, அன்பு செலுத்துபவர் ஞானி. ரமண மகரிμ சிறந்த ஞானியாவார்.
- மணம் உள்ள வண்ண மலர் யாவராலும் விரும்பப்படுவதைப் போல், இனிமையாகப் பேசும் அன்புள்ளம் கொண்ட மனிதனும் எல்லோராலும் நேசிக்கப்படுவான்.
- சுயநலமற்றவனுக்காக சொர்க்கத்தின் கதவுகள் திறந்தே இருக்கும். உன் இதயத்தை விரிவுபடுத்திக் கொள். அதில் உன் குடும்பத்தவர், நண்பர்கள், அக்கம்பக்கம் உள்ளவர் மட்டுமின்றி, நாட்டு மக்கள் அனைவரையும் இருத்திக் கொள். வீட்டிற்காக மட்டும் உழைப்பது, நான், எனது என்ற அடிப்படையில் அமைந்த சுயநலம். இறைவனை நோக்கிச் செல்லும் பயணம், ‘நான்’ என்பதிலிருந்து ‘நாங்கள்’ என்பதற்குச் செல்வதாகும். இதனில் நான், நாங்கள் இரண்டும் வேறுபடாமல் ஒன்றாகி விடுகிறோம்.
- ஜீவநதி எங்கு பெருகியோடுமோ, அங்கு என் ஜீவன் செலுத்தப்படட்டும். எங்கு பசுமையான புல்வெளி உள்ளதோ, அங்கு தெய்வ நலந்தரும் உணவு கிடைக்கும். அன்பின் அரசன் என்னை மேய்க்கும் இடையன். அவரது அன்பு என்றும் குறைவதில்லை. அவரது உடைமையான எனக்கோர் குறையுமில்லை. எனக்கு அவர் என்றுமே சொந்தமானவர்.
- என்னுடைய அன்பு என்னும் வழி நடந்தால் துன்பங்களே இல்லை. கடவுள் நம்முடன் இருப்பதை உணர்ந்து நடந்தால் அவரது அன்பு நம்மைக் காப்பாற்றுகிறது. சாயியைப் போன்ற குரு நம்மை எந்தவிதமான துன்பத்திலிருந்தும் காப்பார். நம் வாழ்வில் துன்பத்தின் சாயல் கூட விழாமல் பார்த்துக் கொள்வார்.
- அன்பு, மதிப்பு, பக்தி இவை மூன்றும் ஒன்றோடொன்று பிணைந்தவை.
- கடவுளின் குழந்தைகள் : சிலர் தம் வாழ்வையே பகவானுக்கு அர்ப்பணிப்பர். சிலர் தாம் ஈட்டும் செல்வத்தைப் பகவானுக்கு அர்ப்பணிப்பர். சிலர் தாம் செய்யும் செயல்களைக் கடவுளுக்கு அர்ப்பணிப்பர். சிலர் தம் ஆத்மாவைப் பகவானுக்கு அர்ப்பணிப்பர். மிகச் சிலரே தம் உயிர், பொருள், உடல், ஆவி என அனைத்தையும் கடவுளுக்கு அர்ப்பணிப்பர். அவர்களே கடவுளின் உண்மையான குழந்தைகள்.
- உண்மையான கல்வி என்பது நமக்குள் இருக்கும் ஞானத்தை வெளிக்கொண்டு வருவதாகும். மனித வர்க்கத்தை நன்கு அலசி ஆராய்வதை விட சிறந்த புத்தகம் என்ன இருக்கிறது?
- கடவுளை நம் தந்தையாக நினைத்தோமானால் மற்ற மனிதர்கள் ஒவ்வொருவரும் நம் சகோதரர் ஆவர். அத்தகைய மனப்பாங்கு வளராத வரையில், பிரார்த்தனைகளால் பயனில்லை.
- பிரார்த்தனை செய்யாமல் செய்யும் செயல்கள், குருடன் தட்டித் தடவி நடப்பதைப் போன்றது. பிரார்த்தனையுடன் தொடங்கப்படும் எந்தச் செயலுமே நல்ல முறையில் பயன்தரத் தக்கதாக அமையும்.
- கல்வி என்பது முழுமையானதாக மனித நலனைப் போற்றி வளர்க்க வேண்டும். அது அறிவை வளர்த்து இதயத் தூய்மையை வளர்த்து ஆன்ம நேயத்தை, ஒழுங்கை வளர்க்க வேண்டும். கல்வியின் நோக்கம், இரக்கம், கருணை ஆகியவற்றைக் கற்றுக் கொள்வதே என்று பாபா கூறுகின்றார். அறிய வேண்டியது நிறைய உள்ளது என்பதைப் புரிந்து கொள்வதே உண்மையான அறிவு ஆகும் (கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு).
- அரைக்க அரைக்க சந்தனம் மணக்கும். தங்கத்தை எவ்வளவு உருக்கினாலும் அதன் தன்மை, பளபளப்பு மாறுவதில்லை. அதேபோல் சிறப்பான ஆன்மாக்கள் தங்கள் புனிதத் தன்மையைக் கடைசிவரை விட்டு விலகுவதில்லை. பூமியில் உண்மைமிகு ஆன்மாக்கள் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாகின்றன. ஆனால் இந்த கஷ்டங்களைத் தாங்கிக் கொள்வதில்தான் இந்த ஆன்மாக்களுக்கும் ஏனைய சாதாரண ஆன்மாக்களுக்கும் வித்தியாசம் உள்ளது.
- புனிதமான ஆன்மாக்கள் பணத்திற்கு மதிப்பு அளிப்பதில்லை. இது பெருந்தன்மைமிக்க மனிதர்களின் இயற்கை குணமாகும்.
- நாம் செய்யும் வினைகளுக்கேற்ப நமக்கு பலன் கிட்டும் என்பது கர்ம விதி. கடவுளும் இதற்கு விதிவிலக்கல்ல. வாமன அவதாரத்தில் மஹாபலியைச் சிறை வைத்தார். இதற்குப் பலனாக கிருஷ்ணாவதாரத்தில் யசோதை கிருஷ்ணனை உரலில் சேர்த்து இடுப்பில் கட்டினாள். கடவுள் அவதாரம் எடுக்கும்போது அனுபவிக்க வேண்டிய கர்மாக்கள் ஏதும் அவருக்கில்லை. தர்மத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற உறுதியைத் தவிர, வேறு எந்த ஆசையோ, குறிக்கோளோ அவருக்கு இல்லை. பக்தர்கள் கடவுளை அன்போடு கூப்பிடும் போது அந்த பக்தர்களின் அன்பிற்கு கட்டுப்படுகிறார். பல சமயத்தில் ஆபத்தில் இருந்து ரட்சிப்பவராகவும் வரம் அளிப்பவராகவும் உள்ளார். ராமாவதாரத்தில் ராமர் அளித்த வரங்கள் கிருஷ்ணாவதாரத்தில் பயன் அளித்தன.
பொன் மொழிகள்
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty