குரு சரணாம்புஜ
கேட்பொலி
வரிகள்
- குரு – சரணாம்புஜ – நிர்பர – பக்த:
- ஸம்ஸாரா – தசிராத் – பவமுக்த: I
- ஸேந்த்ரிய – மானஸ – நியமா தேவம்
- த்ரக்ஷ்யஸி நிஜ-ஹ்ருதயஸ்தம் தேவம் II
விளக்கவுரை
நீ உன்னுடைய புண்ணிய பாவங்களின் பாரத்தையெல்லாம் குருவின் திருவடித் தாமரைகளில் அர்ப்பணம் செய்து உறுதியாக பக்தி செய்தாயானால், பிறவித் தளையினின்று விரைவில் விடுபடுவாய். இங்ஙனம் இந்திரியங்களுடன் மனதையும் கட்டுப்படுத்துவாயானால் உன்னுடைய இருதயத்தில் உறையும் தெய்வத்தைக் காண்பாய்.
பதவுரை
குருசரணாம்புஜ | குருவின் திருவடித் தாமரைகளில்(பாரத்தை வைத்த) |
---|---|
நிர்பர பக்த: | திடமாக பக்தி செய்பவன் |
ஸம்சாராத் | உலகத்திலிருந்து |
அசிராத் | விரைவில் |
பவ முக்த: | பிறவியற்றவனாகி |
ஏவம் | இவ்வாறு |
ஸேந்த்ரியமானஸ (ஸ+இந்த்ரிய+மானஸ) | இந்த்ரியங்களையும் மனதையும் |
நியமாத் | கட்டுப்படுத்துவதாலே |
நிஜ ஹ்ருதயஸ்தம் | தன் உள்ளத்திலுள்ள |
தேவம் | இறைவனை |
த்ரக்ஷ்யஸி | பார்க்கப்போகிறாய் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty