காமம் க்ரோதம்
கேட்பொலி
வரிகள்
- காமம் க்ரோதம் லோபம் மோஹம்
- த்யக்த்வாத்மானம் பாவய கோஹம்
- ஆத்மஞான விஹீனா மூடா:
- தே பச்யந்தே நரக நிகூடா
பொழிப்புரை
தான் யார் என்று அறியாத ஆத்ம ஞானமில்லாத மூடர்கள் நரகத்தில் ஆழ்ந்து உழல்வார்கள். ஆகவே காமம், கோபம், லோபம், மதிமயக்கம் ஆகியவற்றைத் துறந்து “நான் யார்?” என்பதை எப்போதும் சிந்தனை செய்ய வேண்டும்.
பதவுரை
காமம் | ஆசை |
---|---|
க்ரோதம் | கோபம் |
லோபம் | பேராசை |
மோஹம் | மதிமயக்கம் (என்பவைகளை) |
த்யக்த்வா | விட்டு விட்டு |
அஹம் | நான் |
க: | யார் (என்று) |
ஆத்மானம் | தன்னைப் பற்றி |
பாவய | நினைத்துப் பார் |
(யே) மூடா: | எந்த மூடர்கள் |
ஆத்மஜ்ஞான விஹீனா: | ஆத்ம ஞானம் இல்லாதவர்களோ |
தே | அவர்கள் |
நரக நிகூடா: | நரகத்தில் மூழ்கி |
பச்யந்தே | துன்பத்தை அனுபவிக்கிறார்கள் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty