பஜகோவிந்தம்
கேட்பொலி
வரிகள்
- பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
- கோவிந்தம் பஜ மூடமதே I
- ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே
- நஹி நஹி ரக்ஷதி டுக்ருஞ்கரணே II
பொழிப்புரை
விவேகமற்றவனே! கோவிந்தனை (மனதால் நினைத்து) வழிபடு, கோவிந்தனை (வாக்கினால் துதி செய்து) வழிபடு, கோவிந்தனை (தேகத்தால் சேவை செய்து) வழிபடு, மரணகாலம் நெருங்கிய பொழுது “டுக்ருஞ்கரணே” போன்ற வியாகரண (இலக்கண) பாடம் உன்னை ஒருகாலும் காப்பாற்றாது..
பதவுரை
பஜ | வழிபடு |
---|---|
கோவிந்தம் | கோவிந்தனை |
மூடமதே | விவேகமற்றவனே (புத்தி இருந்தும் சரியாக உபயோகிக்காதவன்) |
ஸம்ப்ராப்தே | முடிவு (அந்திமக் காலம்) |
ஸந்நிஹிதே | நெருங்கிய |
காலே | காலத்தில் (இங்கு எமதர்ம ராஜனைக் குறிக்கும்) |
டுக்ருஞ்கரணே | வியாகரணம் / இலக்கணம் |
ரக்ஷதி | காப்பது / ரக்ஷிப்பது |
நஹி | இல்லை |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
பஜகோவிந்தம் முன்னுரை