உணவுப் பிரார்த்தனைகள்

கேட்பொலி - 1
ஸ்துதி வரிகள்
- ப்ரஹ்மார்ப்பணம் ப்ரஹ்ம
- ஹவிர் ப்ரஹ்மாக்னௌ ப்ரஹ்மணா
- ஹுதம் ப்ரஹ்மைவ தேன
- கந்தவ்யம் ப்ரஹ்ம கர்ம ஸமாதினா
விளக்கவுரை
அர்ப்பணம் செய்தல் பிரம்மம். அர்ப்பணம் செய்யப்படும் ஹவிஸ் (நெய், போன்ற பொருட்கள்) பிரம்மம். பிரம்மமாகிய அக்னியில், பிரம்மத்தால் கொடுக்கப்படுகிறது. பிரம்மத்தினிடம் தன் மனதை முழுவதும் லயிக்க வைத்து, தன் காரியங்கள் அனைத்தும் செய்பவன், பிரம்மத்தை அடைகிறான்.
பதவுரை
அர்ப்பணம் | அர்ப்பணம் செய்தல் |
---|---|
ப்ரஹ்ம | பிரம்மம் |
ஹவி: | ஹவிஸ் (நெய் போன்றவை) |
ப்ரஹ்ம | பிரம்மம் |
ப்ரஹ்மாக்னௌ | பிரம்மமாகிய அக்னியில் |
ப்ரஹ்மணா | பிரம்மத்தால் |
ஹுதம் | கொடுக்கப்படுகிறது |
ப்ரஹ்ம கர்ம | பிரம்மமாகிய கர்மத்தில் |
ஸமாதினா | மனம் ஒருமித்துள்ள |
தேன | அவனால் |
ப்ரஹ்ம ஏவ | பிரம்மமே |
கந்தவ்யம் | அடையப்படுகிறது |
கேட்பொலி - 2
ஸ்துதி வரிகள்
- அஹம் வைஶ்வானரோ பூத்வா
- ப்ராணி னாம் தேஹமாஶ்ரித:
- ப்ராணாபான ஸமாயுக்த:
- பசாம்யன்னம் சதுர்விதம்
விளக்கவுரை
உயிர்களின் உடலினுள், நான் உதரக்கனலாக இருந்து கொண்டு, ப்ராண, அபான வாயுக்களுடன் கூடி நான்குவிதமான உணவையும் செரிக்கிறேன்.
பதவுரை
அஹம் | நான் |
---|---|
வைஶ்வானரோ | வைஶ்வானரன் என்னும் உதரக்கனல் |
பூத்வா | ஆகி |
ப்ராணினாம் | பிராணிகளினுடைய |
தேஹம் | தேகத்தில் |
ஆஶ்ரித | இருந்துக்கொண்டு |
ப்ராண | ப்ராணனும் |
அபான: ஸமாயுக்த: | அபானனும் கூடி |
சதுர்விதம் அன்னம் | நான்குவித உணவை |
பசாமி | செரிக்கிறேன் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 3
-
விளக்கம்
-
மேலும் படிக்க