- அன்பான வார்த்தைகளுக்கு அதிகம் செலவிட வேண்டாம். அவை உதடுகளையோ, நாக்கினையோ புண்ணாக்குவ தில்லை. வார்த்தைகள் அதிர்வுகளை உண்டாக்கி நம் மனத்தில் எண்ண அலைகளை உண்டாக்குகின்றன. கேட்கப்படும் வார்த்தைகளைப் பற்றிய எண்ணங்கள் (ண்ம்ஹஞ்ங்ள்) நம்மிடம் ஏற்கெனவே உள்ளதால் என்ன கேட்கிறோமோ அதற்கேற்றாற் போல் செயல்படுகிறோம். எடுத்துக்காட்டாக, கிருஷ்ணா, கோபி, ஐஸ்கிரீம், ரோஸ் என்ற வார்த்தைகளைக் கேட்கும் போது அன்பு அலைகள் நம் உள்ளத்தில் பரவி உடனே நாம் புன்னகை செய்கிறோம். இதையே கடும் சொற்களால் ரவுடி, முட்டாள், நாய் என்றெல்லாம் திட்டினால் வேதனை ஏற்படுகிறது. உலகத்தில் உள்ள முனிவர்கள் அனைவரும் இனிமையாகவும், மிருதுவாகவும் பேசும் இயல்பைக் கொண்டிருந்ததால் தான் அவர்களால் மக்களை ஈர்க்க முடிந்தது. நம் ஸ்வாமி எல்லோரிடமும் பேசும்போது குழந்தைகளாகட்டும், பெரியோர்களாகட்டும் ‘பங்காரு நயனா’, ‘ப்ரேம ஸ்வரூபலரா’ ‘வித்யார்த்திலாரா’ ‘திவ்யாத்மஸ்வரூபா’ போன்ற இனிய வார்த்தைகளை உபயோகிக்கிறார். இந்த வார்த்தைகள் நம் மனத்தில் இனிய மிருதுவான வசீகரமான எண்ண அலைகளை உருவாக்குவதால் நம் குருவின் போதனைகளைப் பின்பற்ற தயாராகி விடுகிறோம்.
- நாம் வெளி உலகில் காணும் தீமைகள் நம் உள்ளே இருக்கும் தீமைகளின் வெளிப்பாடு தவிர வேறெதுவுமில்லை. சத்யத்தைப் பின்பற்றும் மனிதனுக்கு கெடுதலோ பாவமோ ஏதுமில்லை. ஏனெனில், அவனுடைய இதயம் தூய்மையான அன்பால் நிரம்பியுள்ளதால் அவனால் பிறரிடம் குறைகள் ஏதும் காணமுடிவதில்லை. அன்பு செயல்படும்போது கண்டனத்திற்கு வேலை இல்லை.
- நிறையப் பேசுவதால் மட்டும், ஒரு மனிதனை எல்லாம் அறிந்தவன் என்று கூறிவிட முடியாது. பொறுமையான அன்பு கொண்ட வெறுப்பில்லாத மனிதனே எல்லாம் அறிந்தவனாகக் கருதப்படுவான். பல முனிவர்கள் அமைதியின் மூலமே பேசியும் போதித்தும் உள்ளனர். ரமண மகரிμ அவ்வாறிருந்த அமைதியான முனிவர். முகம்மது நபி தன் மீது குப்பைகளைக் கொட்டிய மூதாட்டி உடல்நிலை சரியில்லாது படுக்கையில் கிடந்த போது அன்போடும், ஆதரவோடும் அவளுக்கு சேவை செய்தார். அவர்கள் எல்லோரிடத்திலும் கடவுளைப் பார்ப்பதால் எவ்வளவு பெரிய பாவிகளாக இருந்தாலும்கூட அவர்களிடம் வருத்தப்படுவதில்லை. துன்புறுத்தி, முள்ளால் அடித்து, எச்சில் துப்பி, சிலுவையை மலைக்கு சுமந்து வரச் செய்து ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தனர். பெரிய மகான்கள் இறைவனின் திருக்கரங்களையே எங்கும் காண்கிறார்கள். இதனை மனித குலம் பின்பற்ற வேண்டும்.
- சாதனாவின் முதல் நிலை: தனது தாய் தந்தையரை அன்புடனும் மரியாதையுடனும் நன்றியுடனும் நடத்திட வேண்டும் என்பது மனிதனின் முதல் கடமையாகும். சத்யத்தைப் பேசுவதுடன், தர்ம நெறிப்படியும் நடக்க வேண்டும் என்பது இரண்டாவது கடமை ஆகும். கடவுளின் நாமங்களைச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்பது மூன்றாவது கடமை ஆகும். மற்றவர்களைப் பற்றி அவர்கள் இல்லாதபோது புறம் பேசக்கூடாது. மற்றவர்களிடம் உள்ள நிறைகளைப் பாராட்ட வேண்டும், ஆனால் குறைகளைப் பெரிதுபடுத்தலாகாது என்பது நான்காவது கடமை ஆகும். சாதனாவின் இரண்டாம் நிலை : என்றும் அழியாத நிலையான சத்சித்தானந்தத்தை அடைய சாதனாக்களை நம் இதயத்தில் நிலைநிறுத்த வேண்டும். வேதவாக்கியம் இவ்வாறு கூறுகின்றது: மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, தாயாரே சிறந்த தெய்வம், பிறகு தந்தையார், பிறகு சமூகம் என்று சேவை புரியவேண்டும். எல்லா ஆண்களும், பெண்களும் ஒரு பெரிய உயிர்ப்பின் பாகங்கள் ஆவார்கள். பகவான் பாபா இவ்வாறு அறிவுறுத்துகின்றார். சாதனாவின் மூன்றாம் நிலை : கடவுளின் பெருமைகளையும் லீலைகளையும் உணர்ந்து அவருடைய பேரன்பை மனதில் நிலைநிறுத்துதல் வேண்டும். சாதனாவின் நான்காம் நிலை: எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் அஹிம்சையைக் கடைபிடிக்க வேண்டும். நாம் மற்றவர்களை விமர்சிக்கும் போது அவர்களின் தன்னம்பிக்கைக்கு ஊறு விளைவிப்பதோடு அவர்களின் உறவும் கெட்டு விடுகிறது. இதனால் நாம் நமக்கே தீயவற்றைச் செய்து கொள்கின்றோம். நாம் தீய குணங்களை வளர்த்துக் கொள்வதால் கடவுள் மீது பற்று(அன்பு) செலுத்துதல் குறைந்து போய்விடுகின்றது.
- யாருமே பெரும் பணக்காரர்கள் அல்ல. அதே போல யாருமே பரம ஏழைகள் அல்ல. எல்லோருமே, ஒருவர் மற்றவர்க்கு ஏதோ ஒரு விதத்தில் உதவுகிறோம். ஆதலால் உதவி கேட்டு வருவோர்க்கு உதவி புரிதல் வேண்டும். அப்போது நம் மனதில் நம்பிக்கை வளரும். அன்பு பரிணமிக்கும்.
- இரக்கம், கருணை ஆகியவை நம்பிக்கையை, அறிவை, அன்பை வளர்க்கின்றன.
- உங்களுடைய பிரார்த்தனையை நீங்கள் மறக்கக் கூடாது. ஒவ்வொரு முறை பிரார்த்தனை செய்யும் போதும், உங்கள் பிரார்த்தனை நேர்மையாக இருப்பின், உங்களுக்கு புதிய உணர்ச்சிகள், புதிய அர்த்தங்கள் புரியும். அவை உங்களுக்கு உத்வேகத்தை அளிக்கும். பிரார்த்தனை ஒருவித கல்வி என்பதனையும் உணர்வீர்கள். கடவுளிடம் நேரடி தொடர்பு கொள்வது பிரார்த்தனை ஆகும். பிரார்த்தனை மனிதனுக்கும் கடவுளுக்கும் ஒரு பாலம் ஆகும். அது உயர்நிலையை அடையச் செய்து மனசாட்சியை உயர்த்துகிறது. அது நம்முடைய நலனைப் பற்றிய அக்கறை கொண்ட ஒரு சக்தியிடம் பேசுவது ஆகும்.அன்னையும், தந்தையுமாய் உள்ள மன்னிக்கும் குணம் கொண்ட இரக்கமுள்ள கடவுளிடம் உடனடித் தேவைகளுக்காக சில சமயங்களில் பிரார்த்தனை செய்ய வேண்டி இருக்கும். சுயநலமற்ற பிரார்த்தனைகள் கடவுளால் உடனே நிறைவேற்றப்படுகின்றன. ஏனெனில் அவை ஆன்மீகத்திலிருந்து வெளிவந்த அற்புதங்களை நிகழ்த்துகின்றன.
- உன்னுடைய பிரார்த்தனை, பேச்சாற்றல் மிகுந்துள்ளதா வடிவமைப்பாக உள்ளதா, மிக நீண்டதாக உள்ளதா அல்லது பகுத்தறிவுடன் அமைக்கப்பட்டுள்ளதா என்றெல்லாம் இறைவன் பார்ப்பதில்லை. உனது பிரார்த்தனை எந்த அளவிற்கு உண்மையாக உள்ளது என்பதை மட்டும் அவர் பார்க்கிறார்.
- அதிக அன்பு செய்பவனே, அதிகம் பிரார்த்திப்பான். அன்பிற்குரிய கடவுள் நம் மீது அன்பு செலுத்துகிறார். அவர் நம்மைத் தோற்றுவித்து நம் மீது அன்பையும் பொழிகிறார்.
- கேள்வி: நாம் கடவுளிடம் உரக்கப் பிரார்த்தனை செய்யலாமா?
பதில்: உனக்கு எப்படிப் பிடிக்கின்றதோ அந்த முறையில் பிரார்த்தனை செய். அவர் நிச்சயம் உனது பிரார்த்தனையைக் கேட்பார். ஏனென்றால் எறும்பின் காலடி ஓசையைக் கூட அவரால் கேட்க முடியும். கடவுளை மனதில் நினைத்துக் கொண்டு உரக்கவோ, மெதுவாகவோ விரும்புவது போல நாம் பிரார்த்தனை செய்யலாம். பிரார்த்தனைக்கு என்று எந்த யுக்தியோ, சூத்ரமோ தேவை இல்லை. அன்புடனும், உண்மையுடனும் கதற வேண்டியது மட்டும்தான் வேண்டும். - கேள்வி: பிரார்த்தனையால் நிஜமாகவே விரும்பிய விளைவு ஏற்படுமா?
பதில்: ஏற்படும். எண்ணமும் சொல்லும் ஒன்றாகி உறுதியுடன் பிரார்த்தனை செய்யும்போது அதற்கு விடை அளிக்கப்படுகிறது. வெறும் நாக்கால் (பேச்சால்) செய்யும் பிரார்த்தனையால் எந்த பயனும் இல்லை. “இறைவா! இவைகள் அனைத்தும் உன்னுடையது” என்று பிரார்த்தனை செய்துவிட்டு மனதில் அனைத்தும் தன்னுடையது என்று நினைத்தால் என்ன பயன்? - பிரார்த்தனை என் வாழ்வைக் காப்பாற்றியது. அது இல்லாமல் இருந்தால் நான் எப்போதோ பைத்தியமாகி இருப்பேன். நான் கசப்பான வெளிஉலக மற்றும் சொந்த அனுபவங்களைக் கொண்டுள்ளேன். அவைகள் என்னைத் தற்காலிக வெறுப்பிற்குத் தள்ளின. நான் பிரார்த்தனையினால் மட்டுமே அதிலிருந்து விடுபட்டு வந்தேன்.
- மனிதர்களுடன் பேசும்போது நாம் எந்த விஷயத்தில் வித்தியாசமாக நினைக்கிறோமோ அந்த விஷயத்துடன் பேச்சைத் துவங்குதல் கூடாது. மாறாக, எந்த விஷயங்களில் ஒத்த கருத்தைக் கொண்டுள்ளோமோ அந்த விஷயத்தை அழுத்தந்திருத்தமாகக் கூறவேண்டும். வாழ்க்கையில் ஆன்மீகம் அல்லது லௌகீகம் எதுவாகிலும் எல்லா மனிதர்களுடன் எந்த அளவிற்கு அனுசரித்துப் போகிறோமோ அந்த அளவிற்கு வெற்றி கிட்டுகிறது. ஸ்வாமி சொல்கிறார்: ஒரு நல்ல மேலாளர் என்றால், அவன் மனதைப் பற்றியும் ஆத்மாவைப்பற்றியும் தெரிந்தவனாகவும் இருக்க வேண்டும். ஒருவனது முழு வாழ்க்கையுமே கடவுளுக்கு அர்ப்பணமாகும் போது அன்பும் பரிவும் தானாகவே அவனது சொல் செயல் மூலம் வெளிப்படும். பிறகு நமது கருத்துக்களை ஒத்துக் கொள்ளச் செய்வதற்கும் நடந்தவைகளை நியாயப் படுத்துவதற்கும் தேவையே எழாது. விரோதிகளிடம் கூட பொறுமையைக் கடைப்பிடித்ததை மகான்களின் வாழ்க்கையில் நாம் காண்கிறோம்.
- அன்பான வார்த்தை, கனிவான பார்வை, அன்பான ஸ்பரிசம், மிக ஆழமான புண்களைக் கூடக் குணப்படுத்தும். ஒருவர் போராட முயலும்பொழுது, அமைதியான, புனிதமான விஷயங்களில் அவரின் கவனத்தைத் திருப்பி அதனைத் தடுத்து நிறுத்துவது நம் கடமையல்லவா? தன் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் அஹிம்சையைக் காத்தவர் காந்திஜி. மிகவும் சினமேற்படும் வேளையில் கூட தனது நிலை மாறாமல் அமைதியாக அவர் இருந்தார்.
- கனிந்த பழம் தரையில் விழுந்து, நாம் கவனிக்காமல் விட்டாலும் கூட, அது வீணாவதில்லை. தனது விதையைப் பூமித்தாய்க்கு அளித்து, மீண்டும் முளைத்தெழுந்து பழங்களைத் தருகிறது. அதைப்போல நல்ல மனிதனும் கடவுளின் பரிசாக உள்ளான்.
- உடலின் பிணியைப் போக்க, நேர்மறை எண்ணங்களை (டர்ள்ண்ற்ண்ஸ்ங் ற்ட்ர்ன்ஞ்ட்ற்ள்) விடச் சிறந்த மருத்துவர் இல்லை. எதிர்மறை எண்ணங்களால் தளர்ந்த மனதிற்கு விடுதலை அளிப்பது, நேர்மறையான நோக்கு மட்டுமே.
- இந்த உலகம் முகம் பார்க்கும் கண்ணாடியாக விளங்குகிறது. இது ஒவ்வொரு மனிதனின் பிம்பத்தையும் பிரதிபலிக்கிறது. நீ அதைப் பார்த்துச் சிரித்தால், அதுவும் சிரிக்கிறது. நீ முகம் சுளித்தால், அதுவும் சுளிக்கிறது. நீ எந்த அளவிற்குச் சந்தோஷமானவனாக, அன்பானவனாக இருக்கிறாயோ, அந்த அளவிற்கு அதுவும் உனக்குத் தோன்றுகிறது. எனவே, எதைத் தேர்ந்தெடுப்பது என்று நீயே முடிவு செய்து கொள்.
- சிரிப்பு என்பது ஒரு மருந்து என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியாக இருப்பதற்கு உணர்ந்து எடுக்கப்படும் முயற்சிகள் வலிமையான நீதிநெறிகளை வளர்க்கின்றன. சிரிப்பு, ஆன்மீக டானிக்காகவும், சுத்தம் செய்யும் கிருமி நாசினியாகவும் உள்ளது.
- வாழ்க்கை என்பதே இன்பமும் துன்பமும் கலந்த நிகழ்வுகளைக் கொண்டது. துன்பமான நிகழ்ச்சி ஏற்படும்போது, நாம் நமது சமநிலையை இழந்து விடுகிறோம். அவ்வேளையில் “எதிர்மறையான உள்எழுச்சி தோன்றி நம்மைச் சோர்வடைந்தவர்களாகக் காட்டுகிறது. என்னை யாராவது தவறாகப் பேசி விட்டார்களா? என்னைத் தவறாகப் புரிந்து கொண்டார்களா? நான் அன்பு வைத்த நபர் எனக்கு எதிராக நடந்து கொள்கிறாரா?” – இத்தகைய எதிர்மறை எண்ணங்களை விட்டு விடுவோம். நமக்கு ஏதேனும் மோசமான நிலை ஏற்பட்டால் அதையே நமக்கு உடன்பாடான ஒரு கருவியாக மாற்றி நமது பொறுமையை வளர்த்துக் கொள்வோம். அதுவே நமக்கு ஒரு குருவாகிறது. நமக்கு நடக்கும் அனைத்துமே நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்கவே அமைந்துள்ளது. நம்பிக்கையைத் தளர விடாமலும் நம்மைப்பற்றி நாமே பரிதாபப்படாமலும் இருக்க பழகிக் கொள்ள வேண்டும்.
பொன் மொழிகள்
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty