சத்ரௌ மித்ரே

கேட்பொலி
வரிகள்
- சத்ரௌ மித்ரே புத்ரே பந்தௌ
- மாகுரு யத்னம் விக்ரஹ ஸந்தௌ I
- ஸர்வஸ்மிந்நபி பச்யாத்மானம்
- ஸர்வத்ரோத் ஸ்ருஜ பேத ஜ்ஞானம் II
விளக்கவுரை
பகைவனிடத்தும், நண்பனிடத்தும், புத்திரனிடத்தும், உறவினரிடத்தும் சண்டைக்கோ சமாதானத்துக்கோ முயற்சி செய்யாதே. எல்லாவற்றிலும் கூட உன்னையே காண்பாயாக. “நான்” “நீ” என்ற வேற்றுமை எண்ணத்தை விட்டுவிடுவாயாக.

பதவுரை
| சத்ரௌ | பகைவனிடத்திலும் |
|---|---|
| மித்ரே | நண்பனிடத்திலும் |
| புத்ரே | பிள்ளையிடத்திலும் |
| பந்தௌ | உறவினனிடத்திலும் |
| விக்ரஹஸந்தௌ | சண்டை செய்வதிலும் சமாதானம் செய்வதிலும் |
| யத்னம் | முயற்சியை |
| மா குரு | செய்யாதே |
| ஸர்வஸ்மிந்நபி | எல்லாவற்றிலும் கூட |
| ஆத்மானம் பச்ய | (ஆத்மாவை ) உன்னையே காண் |
| ஸர்வத்ர | எங்கும் |
| பேதஞானம் | பிரித்துப்பார்க்கும் எண்ணத்தை |
| உத்ஸ்ருஜ | விட்டு விடு |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty


















