த்வயி மயி
கேட்பொலி
வரிகள்
- த்வயி மயி சான்ய த்ரைகோ விஷ்ணு
- வ்யர்த்தம் குப்யஸி மய்ய ஸஹிஷ்ணு
- பவஸமசித்த: ஸர்வத்ரத்வம்
- வாஞ்சஸ் யசிராத் யதி விஷ்ணுத்வம்
பொழிப்புரை
உன்னிலும் என்னிலும் பிறரிடமும் விஷ்ணுவே உள்ளார். இது உண்மை. பொறாமை கொள்ளாதே. உன் கோபம் பயனற்றது. எல்லாரையும் எல்லா நேரங்களிலும் ஒரேவிதமாக நினைத்துப்பழகிவிட்டால் கொண்டிருந்தால் தான் நீ விஷ்ணுவுடன் இணைந்தவன் என்பதை அப்பொழுது அறிந்து மோக்ஷத்தை அடைவாய்.
பதவுரை
த்வயி | உன்னிலும் |
---|---|
மயி | என்னிலும் |
சான்யத்ரைகோ(ச+அன்யத்ர+ஏக:) | மேலும்+பிற இடத்தில் + ஒன்றே ஒன்றான |
விஷ்ணு: | பகவான் மஹாவிஷ்ணு (உள்ளார்) |
மயி அஸஹிஷ்ணு: | என்னிடம் ஸஹிப்பின்றி |
வ்யர்த்தம் குப்யஸி | வீணாகக் கோபிக்கிறாய் |
த்வம் | நீ |
விஷ்ணுத்வம் | விஷ்ணுத்தன்மையை |
அசிராத் | விரைவில் (அடைய) |
வாஞ்சஸி | விரும்பினால் |
ஸர்வத்ர | எல்லாரிடமும் |
ஸமசித்த: பவ | ஒரே வித மனமுள்ளவனாக இருப்பாயாக |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty