அஹிம்சை
சத்தியம், தர்மம், பிரேமை, சாந்தி இந்த நான்கு மேம்பாடுகளின் வரிசையில் இயல்பாக வருவது அஹிம்சையாகும்.
அன்பு மற்றும் அனைத்து உயிர்களையும் மதித்தல் ஆகியவற்றின் அறநெறித் தத்துவமே அஹிம்சையாகும். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், ஏரிகள், மலைகள் மற்றும் பனிப்பாறைகள் அனைத்துமே அந்த பகுக்கமுடியாத உயர்ந்த பூரணமான ஒன்றின் பிரிக்கமுடியாத பகுதிகளே என்பதைப் புரிந்து கொண்டு உணர்வதற்காக விடுத்த அழைப்பாகும்.
அன்பின் புரிதலே அஹிம்சை. பார்வையற்ற ஒருவர் நம்மைக் கடந்து செல்லும் போது நம்மீது உரசினால் “அவர் என்ன செய்கிறார் அன்பது அவருக்குத் தெரியாது” என்பதால் நாம் அவரை குறை கூறுவதில்லை. அதுபோலவே உண்மை நிலைக்கு (யதார்த்தத்திற்கு) குருடாக இருப்பவர்கள் நம்மால் மன்னிக்கப்பட வேண்டியவர்கள். படைப்பின் ஒருமைத் தன்மையைப் பற்றிய புரிதலின்றி மற்றவர்களின் குற்றம், குறைகளை நம்மால் மறத்தலோ, மன்னித்தலோ இயலாது.
அஹிம்சையின் கீழ் “Waste Not Want Not” (வீணாக்காதே, விரும்பாதே) என்ற கதை சமுதாயப் பொறுப்புணர்வை விளக்குகிறது.
ஆதாரம்:
1. ஸ்ரீசத்யசாய் பாலவிகாஸ் அமைப்பிற்கான வழிகாட்டுதல் மற்றும் கையேடு
2. மனித மேம்பாட்டை நோக்கி– புத்தகம் 2- ஸ்ரீ சத்யசாய் EHV அறக்கட்டளை