பகவத் கீதா கிஞ்சித தீதா
கேட்பொலி
வரிகள்
- பகவத் கீதா கிஞ்சித தீதா
- கங்கா ஜல லவ கணிகா பீதா I
- ஸக்ருதபி யேந முராரி ஸமர்ச்சா
- க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா II
விளக்கவுரை
எவனால் பகவத் கீதை சிறிதேனும் ஓதப்பட்டதோ, கங்கா தீர்த்தம் துளியேனும் பருகப்பட்டதோ, விஷ்ணுவின் அர்ச்சனை ஒரு தடவையேனும் செய்யப்பட்டதோ அவனுடன் யமன் சச்சரவு செய்வதில்லை. அவனைப்பற்றி யமன் பேசுவதே இல்லை. அவனுக்கு யமதண்டனை இல்லை. அவன் முக்தி அடைகிறான் என்பது கருத்து.
பதவுரை
பகவத் கீதா | கடவுளின் பாட்டு (புனித நூலான பகவத்கீதை) |
---|---|
கிஞ்சித | குறைந்த அளவு |
(அ)தீதா | கற்கப்பட்டதோ |
கங்கா ஜல லவகணிகா | கங்கை ஜலத்துளியின் ஒரு பகுதியாவது |
பீதா | பருகப்பட்டதோ |
ஸக்ருதபி | ஒரு முறையாவது |
(யேந ) | யாரால் |
முராரி | ‘முர’ என்ற அசுரனை வென்ற ஸ்ரீ கிருஷ்ணருக்கு |
ஸமர்ச்சா | அர்ச்சனை |
க்ரியதே | செய்யப்படுகிறதோ |
தஸ்ய | அவனுக்கு |
யமேன | யமனாலே |
சர்ச்சா | சர்ச்சை |
ந க்ரியதே | செய்யப்படுவதில்லை |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty