புத்த ஜெயந்தி என்று அறியப்படும் புத்த பூர்ணிமை, புத்த மதத்தின் மிகப்புனிதமான திருவிழாவாகும். இது வைகாசி மாதத்து பௌர்னமியன்று மே மாதத்தில் வருகிறது. இந்த நாள் புத்தரின் வாழ்க்கையில் மூன்று முக்கிய நிகழ்வுகளை நமக்கு நினைவூட்டுகிறது. அதாவது, புத்தரது அவதாரம், போதி ஞானம் மற்றும் பரி நிர்வாணம் எய்தியது. புத்த பூர்ணிமை என்பதில், ஆழ்ந்த உட்பொருளும் இருக்கிறது. புத்தா என்பது புத்தியை அதாவது ஞானத்தைக் குறிக்கிறது. பூர்ணிமை என்பது, முழுமையடைந்த நிலை. அதாவது, பரிபூரணமான நிலை. இவ்வாறு, இளவரசர் சித்தார்த்தர், தனது ஞானத்தில் முழுமை பெற்று புத்தரான தினமே புத்த பூர்ணிமை தினம்.
புத்தரைப்போன்று, பாலவிகாஸ் குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்களில் அன்பை வளர்க்க சில பயிற்சிகள் அதாவது, தெய்வீகப்பேருரைகள் கேட்டல் புத்தமத பிரார்த்தனைகள் மற்றும் கதைகள் கேட்டல் ஆகியவை அத்தியாவசியமானது. இந்தப் பகுதி, இப்பண்டிகையின் உள்ளார்ந்த நோக்கினைத் தரும். மேலும் இப்பிரிவில் விதவிதமான செயல்பாடுகளும் உள்ளன. அவை பாலவிகாஸ் குருமார்கள் மற்றும் குழந்தைகள் இவ்விழாவினைக் கொண்டாட உதவி புரியும்