கேயம் கீதா

கேட்பொலி
வரிகள்
- கேயம் கீதா நாம ஸஹஸ்ரம்
- த்யேயம் ஸ்ரீபதி ரூப மஜஸ்ரம் I
- நேயம் ஸஜ்ஜன ஸங்கே சித்தம்
- தேயம் தீன ஜனாய ச வித்தம் II
விளக்கவுரை
கீதையும் ஸஹஸ்ர நாமமும் பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீபதியின் ரூபத்தை இடைவிடாது தியானம் செய்யவேண்டும். மனதை நல்லவர்களின் இணக்கத்தில் சேர்ப்பிக்க வேண்டும். பொருளை ஏழை ஜனங்களுக்கு தானம் செய்ய வேண்டும்.

பதவுரை
கீதா நாம ஸஹஸ்ரம் | பகவத்கீதை |
---|---|
கேயம் | பாடப்பட (பாராயணம் செய்யப்பட )வேண்டும் |
ஸ்ரீ பதி ரூபம் | ஸ்ரீமன் நாராயணனின் உருவம் |
அஜஸ்ரம் | எப்போதும் |
த்யேயம் | தியானம் செய்யப்பட வேண்டும் |
சித்தம் | மனதை |
ஸஜ்ஜன சங்கே | நல்லோர்களுடைய சேர்க்கையில் |
நேயம் | ஈடுபட வைக்க வேண்டும் |
தீனஜனாய | ஏழை மக்களுக்கு |
வித்தம் | பணமானது |
தேயம் ச | கொடுக்கப்படவும் வேண்டும் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty