கடவுள் என்பவர் யார்?
நீ யார் என்பதைக் கண்டுபிடித்து விட்டாய் என்றால், கடவுள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இரண்டும் ஒன்றே. நீங்களும் தெய்வீகத்தை அடையமுடியும். உங்களிடம் இல்லாதது எதுவும் என்னிடம் இல்லை. தெய்வீகம் உங்களுக்குள் மறைந்திருக்கிறது. ஸ்வர்க்கம் என்பது எங்கோ வானிலோ அதைத் தாண்டி அண்டவெளியிலோ அமைந்துள்ள இன்ப உலகம் அல்ல. அது உங்களுள் உணரப்படும் ஓர் அனுபவம்.
இறைசிந்தனை : சர்வதா, சர்வகாலேஷு, சர்வத்ர ஹரி சிந்தனம். எல்லா இடத்திலும், எந்நேரத்திலும், எப்படிப்பட்ட தருணத்திலும் இறைநாமத்தை ஓதி இறைசிந்தனையுடன் இரு. இதைக்காட்டிலும் மிகச் சிறந்த ஆத்ம சாதனா இல்லை. இறைசிந்தனையுடன் இருப்பவன் இறைத்தன்மையை அடைகின்றான் (பிரம்மவித் பிரம்மைவ பவதி). இறை சிந்தனை (சத்சிந்தனம்), நன்னடத்தை (சத்ப்ரவர்த்தனம்)க்கு வித்தாகும்.
எல்லோரும் இறைவன் இறைவி என்ற பெற்றோர்களின் குழந்தைகள். அதனால் ஒருவரை ஒருவர் குறைகூறாமல், வசைபாடிக் கொள்ளாமல் எவருக்கும் தீயது நினைக்காமல் வாழவேண்டும். உங்களைப் போலவே உங்கள் சகோதரர்கள் நீங்கள் விரும்பும் பொருட்களின் மீது பற்று வைத்திருக்கிறார்கள். ஒருவன் விரும்புகின்ற பொருளைப் பற்றி குறை காண்பதோ, அதை ஏளனம் செய்து நகைப்பதோ தவறாகும். மாறாக, ஒருவன் அன்பு செலுத்தும் பொருளின்மேல் நீங்களும் அன்பு செலுத்துங்கள். இதுவே பாரதீயர்களின் இயல்பாகும்.
சுயநலம்:
பணிவும், பொறுமையும் மனிதனுக்கு மிக அவசியமான பண்புகளாகும். ஆனால், இன்றைய சமூகத்தில் சுயநலமே ம-ந்து காணப்படுகிறது. இன்று சமூகத்தில் செய்யப்படும் எல்லாப் பணிகளுக்கும் சுயநலமே காரணமாக அமைகிறது. இந்த சுயநலம் என்கின்ற அரக்கனை நமது இதயங்களி-ருந்து எப்போது நாம் வெளியேற்றுகிறோமோ, அன்றுதான் நமக்கும் நாம் வாழ்கின்ற சமூகத்துக்கும் சிறிதளவாவது மகிழ்ச்சி கிடைக்கும். சுயநலத்தை நம் மனதி-ருந்து வெளியேற்றத் தடையாக இருப்பவை (1)நம்பிக்கையின்மை (2) தற்பெருமை (3) பொறாமை (4) கவனக்குறைவு ஆகியவை ஆகும்.
பெண்களைப் போற்று:
பெண்களை நாம் எப்போதும் அன்போடும் மதிப்போடும் நடத்த வேண்டும். எந்தக் குடும்பத்தில் பெண்ணைத் துன்புறுத்தி கண்ணீர்விட வைக்கிறார்களோ அந்தக் குடும்பம் விரைவில் நசிந்துவிடும். பெண்கள் செல்வத்தின் தேவதைகள். செல்வமும் நல்வளமும் விரும்புவோர் பெண்களைக் கௌரவிக்க வேண்டும். பெண்களின் விருப்பத்தை நிறைவேற்றி அவர்களுக்கு தேவையானதைச் செய்வது என்பது திருமகளுக்கு செய்கிற வழிபாடாகும். ஒரு பெண் மகிழ்ச்சியாக இருக்கிற பொழுது, செல்வத்துக்கு அதிபதியான திருமகளும் மகிழ்ச்சி அடைகிறாள். எப்போது அவளைத் துன்புறுத்துகிறோமோ அப்போது செல்வத்துக்குரிய திருமகளும் துன்பமடைகிறாள்
மனுதர்ம சாஸ்திரம்
சீதா: கிறிஸ்தவ மதத்தில் மேடோனாவும் (மேரியும்) இந்து மதத்தில் அயோத்தி அரசி சீதாவும் பெண் குலத்திற்கு முன் மாதிரி ஆவார்கள். இலட்சக்கணக்கான மக்களின் மதிப்பைப் பெற்றவள் சீதா. பலரின் அன்பையும் இரக்கத்தையும் பெற்று பெண் குலத்திற்கு நன்மதிப்பைச் சேர்த்தவள். சீதா அரசியாக இருந்தும், அவள் சுகவாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கவில்லை. ஆடம்பரமாக வாழ்ந்தவர்களை விட, எளிய வாழ்வு நடத்திய முனிவர்களும் கற்றவர்களும் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டாள். காலைக்கதிர் எழுந்து, பறவைகள் ஒஎழுப்பும் போதும், மலர்கள் மலருகின்ற போதும், சிறு பனித் துளிகள் தோன்றும் போதும், மாலைக் கதிர் மறையும் நேரம் வரை, சீதா வனத்தின் ஒவ்வொரு அசைவுடனும் தன் ஜீவனைக் கலந்து போற்றினாள். சீதா சிம்மாஸனத்தில் இருந்தாலும்கூட தன் சுகத்தை நினைக்காமல் மக்கள் நன்மையிலேயே கருத்துச் செலுத்துகிற அரசியாக விளங்கினாள். அவள் தானே துன்பத்தில் சூழ்ந்திருந்தபோது சங்கடத்தின் ஆழத்தையும் வாழ்க்கையின் கசப்பையும் அறிந்திருந்தாள். சீதா அன்பையே தாரகமாகக் கொண்டாள். துன்பத்தில் வீழ்ந்தபோதும் அமைதியோடும் அன்போடும் வாழ்ந்தாள் -சகோதரி நிவேதிதா .
தெய்வத்தாய்:
மனதின் குற்றம் என்பது ஆசை, கோபம், அச்சம் என்பன. இவைதான் மனதினுள் தீமைகளை உண்டாக்குகின்றன. இவை மனதைப் பாதிக்கின்றன. ஒருவன் தாயின்முன் இருக்கிறபோது, பொதுவாக அவனுக்குத் தீய எண்ணங்கள் வருவதில்லை. பெற்றெடுத்த தாயின் முன்பு இப்படி என்றால், தெய்வத்தாயின் முன் அவன் மனம் இன்னும் சரியாக இருக்கும். உடலைத் தூய்மைப்படுத்துவது தண்ணீர். அதுபோல் தியானம் என்ற தீர்த்தத்தால் மன அழுக்கை ஒருவன் போக்க முடியும். அதாவது, புனிதமான தெய்வத்தாயை நோக்கித் தியானம் செய்ய வேண்டும்.
காஞ்சி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யா ஸ்வாமிகள்