ஜோதித் தியானம் உலகளாவியது மற்றும் மிகவும் சக்தி மிக்க தியானம் என்று ஸ்வாமி கூறுகிறார். பொழுது புலரும் முன், வைகறையில் இதனைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இந்த முறையில், ஜோதியின் இயக்கமானது, நமது உடலுக்குள்ளும், பின்னர் வெளியில் புறவுலகில் உள்ள இருட்டையும், தீயவைகளயும் சுத்திகரிக்கிறது. இந்த உத்தியுடன் இறை நாமத்தை ஜபித்தலானது, ஆன்மீக முன்னேற்றத்திற்கான சிறந்த முதற்படியாகும்.
இந்த தியான அமர்வில், தியானம் செய்பவர்கள், தன்னுள், ஜோதிச் சுடரின் இயக்கத்தைக் காட்சிப் படுத்தும் அளவுக்கு, வசதியாக நேரமளித்து செய்யப்பட வேண்டும். கூடுதல் அமர்வுகளில் நேரத்தை அதிக்கப்படுத்துவதால், அதிக பயன் அடைய முடியும். இந்தப் பிரிவு விரிவான விளக்கங்களைத் தன்னுள்ளே கொண்டுள்ளது மட்டுமின்றி தியான அமர்விற்கு உதவ வழிகாட்டுதல் காணொளியும் கொண்டுள்ளது