சிவன் என்றால் மங்களகரமானவர் என்று பொருள். சிவராத்திரி என்றால் மங்களங்கள் தரும் இரவு. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை கிருஷ்ண பக்ஷத்தில் 14வது நாள் மாத சிவராத்திரி ஆகும். வருடத்திற்கு ஒருமுறை மாசி மாதத்தில் வரும் தேய்பிறை 14வது நாள் மகா சிவராத்திரி என்று அனுஷ்டிக்கப்படுகிறது. இது மற்ற சிவராத்திரி நாட்களை விட மிகவும் மங்களகரமானது.மகா என்றால் உயர்ந்த; மகா சிவராத்திரி என்றால் மிகவும் சிறந்த சிவராத்திரி என்று பொருள்.
சந்திரனே நம் மனதிற்கு அதிபதியான தெய்வம். மனதையும், புலன்களையும் கட்டுப்படுத்த நினைப்பவருக்கு, அதைப் பயிற்சி செய்ய மிகவும் உகந்த நாள் இந்த சிவராத்திரி நாளாகும் என்று நமது சுவாமி கூறுகிறார். இந்த மங்களமான இரவுப் பொழுதை, சிரவணம், ஸ்மரணம், கீர்த்தனம் தர்ஷனம் ஆகியவற்றின் மூலம் கொண்டாடுவதே மிகச்சிறந்த வழியாகும்.
இந்தப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள சிவ தத்துவத்தின் விரிவான விளக்கம், சிந்தனையைத் தூண்டும் நாயன்மார்களின் கதைகள், பிரிவு 1,2 குழந்தைகளுக்கான திறமைமிக்க செயல்பாடுகள், எல்லா வயதினருக்கும் ஏற்ற விளையாட்டுக்கள், வண்ணமிகு ரங்கோலிகள் மற்றும் திவ்ய தரிசனத்திற்காக
மனம் கவரும், சிவபெருமானின் சுவரொட்டிகள் ஆகியவை மேலே கூறப்பட்டுள்ள(சிரவணம், ஸ்மரணம், கீர்த்தனம், தர்ஷனம் ஆகிய) பக்தி மார்க்கங்களைப் பின்பற்ற உதவும்.













![அஷ்டோத்திரம் [55-108]](https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/04/ashtothram-tiles.png)








