Home 2018-2019 Maargazhi Kolam – Day 30

Maargazhi Kolam – Day 30

1365
0

 

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

பொருள்:

கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை; பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே! நீ தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு.அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களை யுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.

Vangak Kadal kadaintha Madhavanaik Kesavanai
Thingal thirumugatthuch cheyizhaiyar sendrirainji
Angap parai konda vaatrai anipuduvaip
Painkamalath than theriyal pattarpiran Kodhai sonna
Sangath thamizh maalai muppadum thappame
Ingip parisuraippar eerirandu maal varaith tholl
Senkann thirumugaththu selvath thirumaalal
Engum thiruvarul pettru inburuvar empavaai.

Meaning

The Lord Madhava, who churned the oceans for the devas, one who killed the demon Kesi, one whose face is like the moon and one who is worshipped by the women on the cowherd clan who are dressed with fine ornaments, was worshipped by Sri Andal of Srivilliputtur through this garland of thirty tamil verses that are greatly enjoyable. All devotees who worship the Lord whose four shoulders are strong, whose eyes are bright red and who is the embodiment of all riches with these verses with similar zeal, will forever obtain the grace and blessings of the Lord and be supremely happy.

– Rangoli by Smt.Janani Raghavan
– Vocal by Selvi. P. Sreemayi

(Balvikas Alumna)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here