“AARADHANA – SAMARADHANA”
On this Memorable day, let’s develop samyak Dhrishti through this attractive SARVADHARMA Rangoli and tread along Swami’s path.
Sing Along! this prayerful melody asking swami to give energy, peace and joy.
“ஆராதனை சமாராதனை”
நினைவிற்குரிய நாளாகிய இன்றைய ஆராதனை தினத்தில், கண்கவர் “சர்வ தர்ம சின்னம்” வண்ணக்கோலம், நம்முள் நன்மை, தீமையைப் பகுத்தறியும் உணர்வையும், ஒற்றுமையுணர்வையும் வளர்த்து நம் பகவானின் பாதையில் நம்மை நடக்கத் தூண்டட்டும்! மேலும், நம் பகவானிடம் ஆற்றல், அமைதி மற்றும் ஆனந்தத்தைப் பிரார்த்திக்கும் ரம்யமான இந்தப் பாடலையும் இணைந்து பாடுவோம்.
Rangoli by Chennai Metro South Balvikas
சத்ய சாய் நாமம் பாட தினமும் கூடுவோம்
சக்தி பக்தி முக்தி பெறவே அவனை நாடுவோம் (சத்ய சாய் )
சூது வாது பேதம் எல்லாம் பாபா நீக்குவார்
வேத பொருளாய் விளங்கும் பாபா பாதை காட்டுவார்
தேவ கீதம் பாடியே நம் சிந்தை மகிழ்விப்பார் (2)
மேகம் போல கருணை மழையாய் பொழிந்து காட்டுவார் (சத்ய சாய்)
Vocal by – Smt. Savitha Sai Shravanam
Composition of – Smt. Sumithra Kalyanaraman
சூப்பர் ரங்கோலி மற்றும் பாடலும் பாடல் வரிகளும். சுமித்ரா கல்யாணராமன் சாய் ராம் எங்கள் சமிதியின் எம். சீ. ஆவார்கள். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க பாரதம். பாரதம் காப்போம் வீட்டில் இருந்து கொண்டே.