Home 2018-2019 Thiruppaavai – Verse 1

Thiruppaavai – Verse 1

2541
1

 

 

மார்கழித் திங்கள்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

விளக்கம்:

மார்கழி மாதம் பிறந்து விட்டது முழு நிலவு ஒளிவீசுகிறது. செல்வ வளம் நிறைந்த ஆயர்பாடியில் வசிக்கும் அழகிய மங்கையர்களே! அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! எழுந்திருங்கள். இன்று நாம் அதிகாலையில் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதா பிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், தாமரை மலரைப் போன்ற சிவந்த கண்களை உடையவனும், சூரிய, சந்திரர்களைப் போல பிரகாசிக்கும் திருமுகத்தையுடையவனும், நாராயணனே கண்ணனாக அவதரித்து நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும் என்று கூறி தோழியரை நோன்பு நோக்க அழைக்கிறாள் ஆண்டாள்.

 

 

Maargazhi Thingal

Maargazhi-th thingal madhiniraindha nannalal
Neeradap pothuveer pothumino nerizhayeer!
Seermalgum aaipadi selva chirumeergal
Kooerval kodum thozhilan Nandagopan kumaran
Er-aarndha kanni Yosadai ilam singam
Kaar meni chengan kadhir madhiyam pol mukathan
Narayanane namakke parai tharuvaan
Paaror pugazha padindelor empaavaai.

Meaning :

This first verse sets the time as the first day of the month of Margazhi (When Sri Andal sung this verse that was probably a full moon day; thingal – month madhi – moon). Andal invites the young girls of the prosperous Ayarpadi and everyone to symbolically bathe and join in the excellent and exemplary worship of Lord Narayana who will bless us and give us succour. Like in all the verses the Lord is referenced not just by name but by a number of lines of praise about His Form, lineage, beauty, valour, kindness and many virtues and also anecdotes from his victories and other illustrious events. In this verse the Lord is referenced as Krishna, the son of Nandagopan (who is ever vigilant with a sharp spear to protect the baby Krishna), the lion-cub like son of the beautiful eyed Yashoda, the Lord who is dark, and whose face is radiant like the sun.

– Rangoli by Smt.Janani Raghavan
– Vocal by Selvi. M.Sri Harshini

(Balvikas Alumna)

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here